மஹிந்த எச்சரிக்கை..!

Published By: Robert

10 Jul, 2017 | 10:37 AM
image

நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நிறுத்­தினால் அது நாட்டின் வளர்ச்­சிக்கே பெரும் பாதிப்­பாக அமையும் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

அர­சாங்கம் அபி­வி­ருத்­தியில் குள­று­படி செய்யும் வேளை எனது குடும்­பத்தை பழி­வாங்­கு­கின்­றது. எனது மகன்­மார், சகோ­தாரர்கள் அனை­வரும் கைது செய்யப்பட்­டனர். ஆகவே இந்த வைராக்­கி­ய­மான அர­சி­யலை கைவி­டுங்கள். அதுதான் நல்­லது என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

மாத்­த­றையில் நேற்று நடை­பெற்ற நிகழ் வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மேலும் உரை­யாற்­று­கையில்,

நாட்டில் முன்­னெ­டுக்­கப்­படும் பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நிறுத்­து­வதன் ஊடாக நாட்டின் வளர்ச்­சிக்கு பெரும் பாதிப்­புகள் ஏற்­படக்கூடும். தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­கடி எதிர்­கா­லங்­களில் மேலும் அதி­க­ரிக்கும். அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்கு மக்­களின் எதிர்ப்­புகள் வரு­வது சக­ஜ­மாகும். எனினும் அதற்­கான அபி­வி­ருத்­தி­களை நிறு த்­தினால் அது பெரும் பார­தூ­ர­மான சிக்­க­லாக மாறும்.

முன்­னைய காலங்­களில் பல்­வே­று­பட்ட அபி­வி­ருத்தித் திட்­டங்கள் நிறுத்­தப்­பட்டு காலம் தாழ்த்­தப்­பட்­ட­மையின் கார­ண­மாக நாடு இன்னும் இந்த நிலை­மையில் உள்­ளது. எனினும் எனது ஆட்­சிக்­கா­லத்தில் அவ் ­வாறு காலம் கடந்த அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மீள ஆரம்­பித்து நிறைவு செய்தேன்.

ஆனால் தற்­போ­தைய அர­சாங்கம் அபி­வி­ருத்தித் திட்­டங்­களை நிறுத்தி வரு­கின்­றது.  மின்­கலம் உட்­பட இயந்­தி­ரங்கள் இயங்­காத வாக­ன­மொன்றை ஒருவர் பெறும் போது அவர் அதனை கட்­டி­யெ­ழுப்­பு­வது பெரும் சிர­ம­மா­ன­தாக மாறும். 

இந்த அர­சாங்கம் அபி­வி­ருத்­தியில் குள­று­ படி செய்யும் வேளை எனது குடும்பத்தை பழிவாங்குகின்றது. எனது மகன்மார், சகோ தரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட னர். ஆகவே இந்த வைராக்கியமான அரசி யலை கைவிடுங்கள். அதுதான் நல்லது என் றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08