வழி­ந­டத்தல் குழுவின் நாளைய கூட்டம் இரத்து

Published By: Robert

10 Jul, 2017 | 10:10 AM
image

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டுள்ள வழி­ந­டத்தல் குழுவின் கூட்டம் நாளைய தினம் நடை­பெற்­றவிருந்த நிலையில் திடீ­ரென இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை தயா­ரிப்­ப­தற்­கான வழி­ந­டத் தல் குழு­வா­னது இடைக்­கால அறிக்கை வரைபை பாரா­ளு­மன்­றத்­திற்கு சமர்ப்­பிப்­ப­தற்­கான பணி­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக பாரா­ளு­மன்ற அமர்­வுகள் நடை­பெ­றாத நாட்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக வழி­ந­டத்தல் குழுவின் அமர்­வு­களை நடத்­து­வ­தென கடந்த வாரம் இடம்­பெற்ற அமர்­வு­களின் போது ஏகோ­பித்த இணக்­கத்­திற்கு வரப்­பட்­டி­ருந்­தது.

எனினும் தற்­போது குறித்த இணக்­கப்­பாட்டின் படி நாளை முதல் தொடர்ச்­சி­யாக நடை­பெ­று­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த அமர்வு தற்­கா­லி­க­மாக நடை­பெ­ற­மாட்­டாது என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இருப்­பினும் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் மகா­ சங்­கத்­தினர் விடுத்த அறி­விப்­புக்­களை அடுத்து சர்ச்சை நிலை­மைகள் எழுந்­துள்­ளன. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட முக்­கிய அர­சியல் தலை­வர்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கும் பணிகள் மக்கள் ஆணைக்கு ஏற்­பட முன்­னெ­டுக்­கப்­படும் என்று அழுத்தம் திருத்­த­மாக கூறி­வ­ரு­கின்­ற­போதும் முன்னாள் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வான கூட்டு எதிர்­க்கட்­சி­யினர் மகா­ சங்­கத்­தி­னரின் தீர்­மா­னத்­திற்கு முர­ணாக செயற்­ப­டக்­கூ­டாது என்று அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­கின்­றனர்.

அதே­நேரம் பண்­டா­ர­நா­யக்க மாநாட்டு மண்­ட­பத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி நடை­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்பு மாநாட்டில் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான இடைக்­கால அறிக்கை வரைபு சமர்ப்­பிக்­கப்­பட்டு கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக தினேஷ் குண­வர்த்­தன எம்.பி. சபை யில் எழுப்­பிய பிரச்­சி­னையை அடுத்து இறு­தி­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற வழி­ந­டத்தல் குழு கூட்­டத்­திலும் அது­கு­றித்து கடு­மை­யான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. 

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தில் பிர­தான செயற்­பாட்­டா­ள­ரான ஜனா­தி­பதி சட்டத்தரணி கலா நிதி ஜயம்பதி விக்கிரமரட்ண எம்.பி.க்கும் தினேஷ் குண வர்த்தன எம்.பி.க்கும் இடையில் இவ்வாறான கருத்து மோதல் இடம்பெற்றிருந்த நிலையில் குறித்த அமர்விலும் தீர்க்கமான விடயங்கள் எதுவும் கலந்துரையாடப்படாது நிறைவுக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47