பாரி­ஸி­லுள்ள பற்றாகிலன் அரங்கில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த துப்­பாக்­கி­தா­ரிகள் நடத்­திய சூட்டின் போது இரு கால்­க­ளும் காய­ம­டைந்த பெண்­ணொ­ருவர் தனது முன்னாள் காத­லரின் உயிரைக் காப்­பாற்றப் போரா­டிய நெஞ்சை நெகி­ழ­வைக்கும் சம்­பவம் தொடர்­பான செய்­திகள் வெளியா­கி­யுள்­ளன.

அமெ­ரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சொந்த இட­மாகக் கொண்ட ஹெலன் வில்ஸன் (49 வயது) என்ற மேற்­படி பெண் பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த நிக் அலெக்­ஸாண்டர் (36 வயது) என்ற குறிப்­பிட்ட நபரை பல வருட கால­மாக காத­லித்து வந்­துள்ளார்.
இந்­நி­லையில் நிக்­கிற்கு பிரித்­தா­னி­யாவைச் சேர்ந்த பொலினா பக்லி என்ற பெண்­ணுடன் காதல் தொடர்பு ஏற்­பட்­ட­தை­ய­டுத்து அவர்­க­ளி­டை­யே­யான உறவு முறி­வ­டைந்­தது.


எனினும் நிக் மீதான காதலை மறக்க முடி­யாத நிலையில் ஹெலன் இருந்­துள்ளார்.
இந்­நி­லையில் நிக்கும் ஹெலனும் கடந்த வெள்ளிக்­கி­ழமை இரவு பற்றாகிலன் அரங்கில் இடம்­பெற்ற இசை நிகழ்ச்­சியின் போது ஒரு­வ­ரை­யொ­ருவர் சந்­திக்க நேர்ந்­தது.


மேற்­படி நிகழ்ச்­சியில் தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த துப்­பாக்­கி­தா­ரிகள் நடத்­திய சூட்டில் ஹெலன் இரு கால்­க­ளும் காய­ம­டைந்து நடக்க முடி­யாத நிலைக்கு உள்­ளானார்.


துப்­பாக்­கி­தா­ரிகள் எழுந்து ஓடு­வ­தற்கு முயற்­சிக்கும் அனைவர் மீதும் துப்­பாக்கிச் சூட்டை நடத்­து­வதில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
நிக்கும் ஹெலனும் இறந்­தது போன்று பாசாங்கு செய்து உயிர் தப்பும் முயற்­சியில் ஈடு­பட்­டனர்
இந்­நி­லையில் நிக்கின் அரு­கி­லி­ருந்த ஒருவர் எழுந்து ஓட முயற்­சிக்­கவும் அவர் மீது துப்­பாக்­கி­தா­ரிகள் சூட்டை நடத்­தி­யுள்­ளனர்.
இதன் போது துப்­பாக்கி ரவைகள் நிக்கின் உடலை ஊடு­ருவிச் சென்­றுள்­ளன.


துப்­பாக்­கி­தா­ரிகள் பார்­வை­யி­லி­ருந்து மறைந்­ததும் ஹெலன் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டு­வ­தற்கு முயற்­சிக்­காமல் முன்னாள் காத­லரின் உயிரைக் காப்­பாற்ற முயற்­சித்­துள்ளார். அவர் நிக்கின் தலையை தனது மடியில் தாங்கி அவ­ருக்கு செயற்கை சுவாசம் அளிக்க முயன்றார்.


எனினும் கடும் காயத்­துக்­குள்­ளா­கி­யி­ருந்த நிக்கை காப்­பாற்ற அவரால் முடி­ய­வில்லை.
மேற்படி தாக்குதலில் காயமடைந்த இரு அமெரிக்கப் பிரஜைகளில் ஹெலனும் ஒருவராவார்.
அமெரிக்க மாணவரான நொஹெமி கொன்ஸாலெஸ் (23 வயது) இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.