தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் டெவோன் சென்.அன்றூஸ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் மற்றும் வேனும் அட்டனிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற காருமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று நண்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் குறித்த வேனை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமே இவ்விபத்துக்கான காரணம் என தெரியவந்துள்ளது.

இவ்விபத்தினால் சுமார் ஒரு மணித்தியாலம் இவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணகளை தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.