மட்டக்களப்பு நெடுஞ்சாலைகளில் பெருமளவில் அலைந்து திரியும் கட்டாக்காலிகளால் பாரியளவில் வீதி விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வகின்றனர். 

காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, பிள்ளையாரடி, தன்னாமுனை, கல்லாறு, நாவற்குடா, செங்கலடி, கிரான் உள்ளிட்ட பல பிரதான வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான மாடுகள் வீதியின் நடுவில் கூட்டம் கூட்டமாக படுத்துக்கிடப்பதனால் வாகன சாரதிகள் பெரும் அவலங்களை எதிர்கொள்கின்றனர்.

இவற்றை தடுப்பதற்கு உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றபோதிலும் கால்நடை வளர்பாளர்களின் கவனயீனம் காரணமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் உள்ளுராட்சி சபை நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- ஜவ்பர்கான்