பல விருதுகளை குவித்த ‘ஜோக்கர் ’ படத்தை தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் நிறுவனம் அடுத்ததாக கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தை தயாரித்து வெளியிடவிருக்கிறது. இப்படத்தை இம்மாதம் 14 ஆம் திகதியன்று வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் எதிர்பாராமல் திடீரென்று கேளிக்கை வரியை ரத்துச் செய்ய வலியுறுத்தி தமிழக படமாளிகைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக படங்களின் வசூல் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இம்மாதம் 14 ஆம் திகதியன்று கூட்டத்தில் ஒருவன் படத்தை திரையிடாமல் இம்மாத இறுதியில் அதாவது ஜுலை 28 ஆம் திகதியன்று இப்படம் வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார். இதில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் ஆகியோர்  நாயகன் நாயகியாக நடித்திருக்கிறார்கள். ஞானவேல் இயக்கியிருக்கிறார்.

இதே திகதியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுசுடன் மோதும் ‘கூட்டத்தில் ஒருவன் ’ தனி ஒருவனாக வெல்லவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்