இலங்கை அரசிற்கு கண்டனம் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் : 14ம் திகதி தீகுளித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் அறிவிப்பு

Published By: Robert

09 Jul, 2017 | 10:47 AM
image

எல்லைத்தாண்டும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையிலான இலங்கை அரசின் புதிய சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று முதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாகவும், போதை பொருட்களை கடத்துவதாகவும் கூறி இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை சிறைபிடித்து செல்வதும், தாக்குவதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக ராமேசுவரம் துறைமுகத்தில் மீனவர்கள் சங்கத்தினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்டத்தை நீக்க மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை ராமேசுவரத்தில் இன்று முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதி தீக்குளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34