மாண­வர்கள் உள­ந­லப்­பா­திப்­புக்­களால் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­வதும், முடி­வெ­டுக்க முடி­யாமல் தடு­மா­று­வதும் , தற்­கொ­லை­க­ளுக்கும், கொலை­க­ளுக்கும் கார­ண­மாக அமை­வது உல­க­ளா­விய ரீதியில் பல நாடு­க­ளிலும் அண்­மைக்­கா­லங்­களில் அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய விட­ய­மாக உரு­வெ­டுத்­து­வ­ரு­கி­றது. இதற்கு நமது நாடும் விதி­வி­லக்­கல்ல என்­ப­தனால் இதனைச் சரி­யான முறையில் அணுக வேண்­டி­யது காலத்தின் தேவை­யாக உள்­ளது.

உள­நலப் பாதிப்­புக்­க­ளுக்­கான கார­ணங்கள் 

அறிவு, திறன்கள் , மனப்­பாங்கு , செயற்­பா­டுகள் , பண்­புகள் பாட­ரீ­தி­யான அடை­வுகள் என்­பன எல்லா மாண­வர்­க­ளி­டமும் ஒரே மாதி­ரி­யாகக் காணப்­ப­ட­வேண்டும் என எதிர்­பார்ப்­பது இயற்­கைக்கு முர­ணா­ன­தாகும். ஒரு­வரை இன்­னொ­ரு­வ­ருடன் ஒப்­பிட்டுப் பார்ப்­பதும் பரீட்­சை­களில் கூடு­த­லான பெறு­பே­று­களைப் பெற­வில்லை.  பல்­க­லைக்­க­ழக அனு­மதி கிடைக்­க­வில்லை என்­ப­தற்­காக மாண­வர்­க­ளிடம் தகா­த­மு­றை­களில் மன­தைப்­ புண்­ப­டுத்தும் படி நடந்து கொள்­வதும் அவர்­களை நிர்க்­கதி அற்­ற­வர்­க­ளாக மாற்­றி­வி­டு­கி­றது. 

கற்­றலில் இடர்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை இனங்­கண்டு பரி­கார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளாமல் வகுப்­ப­றை­க­ளிலும் , பெற்றோர் முன்­னி­லை­யிலும் தகாத வார்த்­தை­களைப் பிர­யோ­கிப்­பதும் அவ­மா­னப்­படும் விதத்தில் பொருத்­த­மற்ற வார்த்தை பிர­யோ­கங்கள் தண்­ட­னை­களை வழங்­கு­வதும் கவ­லைக்­கி­ட­மான பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தி வரு­வதை நாளாந்தம் ஊட­கங்கள் வாயி­லாக அறியக் கூடி­ய­தாக உள்­ளது.

பொருத்­த­மற்ற கற்­பித்தல் முறைகள் கார­ண­மா­கவும் பாட­சா­லை­யிலும் வீட்­டிலும் காணப்­படும் அழுத்­தங்கள் அவ­ம­திப்பு என்­பன மாண­வர்­களைத் தன்னம்­பிக்கை இழக்­கச்­செய்­வ­துடன் தனக்குப் படிப்புப் பொருத்­த­மற்­றது என்ற தாழ்வு மனப்­பான்­மையை ஏற்­ப­டுத்­து­வதும் உண்டு.

ஆசி­ரி­யர்­க­ளாலும், பெற்­றோர்­க­ளாலும், உற­வி­னர்­க­ளாலும்  வெறுக்­கப்­ப­டு­கின்ற பொழுது சில மாண­வர்கள் பொருத்­த­மற்ற முடி­வு­களை எடுப்­பதைக் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஒழுக்கம் தொடர்­பான பிரச்­சி­னை­களும் இள­மைப்­ப­ரு­வத்தில் புரி­யாத வயதில் காதல் வயப்­படும் பொழுது சரி­யாக நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மையால் அவர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களும் தவ­றான முடி­வு­க­ளுக்கு இட்டுச் செல்­கின்­றன. கவ­லைகள், கூடு­த­லான கோபம்,  நிம்­மதி இன்மை என்­பன கார­ண­மாக பிற­ரைத்­தாக்க முற்­படும் சம்­ப­வங்­களும் உள்­ளன. சித்த சுவா­தீ­ன­மற்­ற­வர்­க­ளாகத் தடு­மாறித் தங்கள் வாழ்­வையும் இழந்து தற்­கொலை முயற்­சி­களில் ஈடு­ப­டு­வதும் சாதா­ர­ண­மா­கி­விட்­டது.

இள­வ­யது காதல் 

உல­கி­லுள்ள உயி­ரி­னங்கள் அனைத்­திற்கும் காதல் உணர்வு இயற்­கை­யா­னதே. “உடல் உணர்­வு­க­ளுக்கு அப்பால் அன்பே உரு­வான இரு ஆத்­மாக்­களின் சங்­கமம் தான் உண்­மைக்­கா­த­லாகும்.”குழந்­தையின் வளர்ச்­சிக்­கட்­டங்­களில் வய­திற்­கேற்ப பரு­வ­மாற்­றங்கள் உடல் உள ரீதியில் மட்­டு­மன்றி  உணர்­வுகள் ரீதி­யிலும் ஏற்­ப­டு­வது இறை­வனின் படைப்­பாகும்.

ஒரு குறித்த பரு­வத்தின் பின்னர் எதிர்ப்­பா­லா­ருடன் பழக விரும்­புதல், அள­வ­ளாவ முற்­ப­டுதல் சாதா­ர­ண­மான விட­ய­மாகும். இருப்­பினும் அனைத்து மாண­வர்­களும் காதல் வயப்­ப­டு­வ­தில்லை. எனவே எதிர்ப்­பா­லா­ருடன் பழ­கு­வதை சந்­தேகம் கொண்டு பார்ப்­பதும் கதை­கட்­டு­வதும் பிற்­கா­லத்தில் அவர்­களின் நடத்தைக் கோலங்­களை மாற்றித் தவ­றான பாதைக்கு இட்டுச் செல்கின்­றன.

புகைப்­ப­டங்­களை வைத்­தி­ருத்தல் , கடி­தங்­களை வைத்­தி­ருத்தல் , நினை­வுப்­ப­தி­வு­களை வைத்­தி­ருத்தல், நினை­வுச்­சின்­னங்­களை வைத்­தி­ருத்தல் என்­ப­ன­வற்றை வைத்­துக்­கொண்டு அவர்­க­ளைப்­பற்றி ஆழ­மாகச் சிந்­திக்­காமல் பொருத்­த­மற்ற முறையில் அணுகி எடுக்­கின்ற நட­வ­டிக்­கை­களால் இர­க­சி­யங்கள் அம்­ப­ல­மாக்­கப்­ப­டு­வதால் , வெட்கம் , அவ­மானம் என்­ப­வற்றைத் தாங்க முடி­யாத நிலையில் தவ­றான முடி­வு­களை எடுக்க முற்­ப­டு­கின்­றனர்.

தற்­கொலை முயற்­சி­க­ளுக்­கான கார­ணங்கள் 

புரி­யாத வய­திலே புரி­யாமல் செய்த விட­யங்­களால் பாதிப்­புக்கு உள்­ளா­னதால் பாட­சா­லை­யி­லும், பெற்­றோ­ராலும் வெறுக்­கப்­ப­டு­வ­தான உணர்வு, அப­யக்­கரம் நீட்­டு­வ­தற்கும் அன்பு செலுத்­து­வ­தற்கும் இவ்­வு­லகில் யாரும் இல்லை என்ற ஏக்கம்,  வெட்கம் , கவலை, மன அழுத்தம் மற்­ற­வர்­களின் பார்­வைக்கு முகம் கொடுக்க முடி­யாமை துணிவை இழத்தல், நிலை தடு­மாறல். என்­பன இந்த தவ­றான முடி­வுக்கு இட்டுச் செல்­கின்­றன

இவ்­வா­றான செய்­தி­களை அநே­க­மானோர் அறிந்­தி­ருப்­ப­தில்லை. இவ்­வாறு வாழ வேண்­டி­ய­வர்­களின் உயிர்கள் இளம் வயதில் இழக்­கப்­ப­டு­வது நியா­ய­மா­னதா ? நாமும் இதற்கு உடந்­தை­யாக இருக்­க­லாமா ? இழப்­புக்கள் தொடர்­வது நாட்­டிற்கும் எமக்கும் ஏற்­பு­டை­ய­தா­குமா ?

பொருத்­த­மான அணு­கு­முறை

மாண­வர்­களை வழி­காட்ட முற்­ப­டு­கின்ற பொழுது அடை­வு­மட்­டத்தை உயர்த்­து­வ­தற்­கான வகுப்­பறைக் கற்றல் செயற்­பா­டுகள், கூடு­த­லான புள்­ளி­களைப் பெற­வைத்­த­லுக்­காக, பாட­சா­லை­க­ளிலும் , வீட்­டிலும் மேற்­கொள்­ளக்­கூ­டிய மேல­திக நட­வ­டிக்­கைகள் என்­ப­ன­வற்றைப் பொறுத்­த­வ­ரை­யிலும் ஒழுக்கம், காதல் விவ­கா­ரங்கள் என்­ப­ன­வற்றைப் பொறுத்த வரை­யிலும் அவர்­களின் தற்­போ­தைய பொருத்­த­மற்ற செயற்­பா­டுகள் எதிர்­கா­லத்தில் எவ்­வா­றான தீய விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதை தெளி­வாக  விளக்கி ஆலோ­சனை வழங்கி உதவி புரி­வதே சாத­க­மான விளை­வு­க­ளைத்­தரும். முரண்­ப­டுதல், எதிர்த்து நின்று செயற்­ப­டுதல், துன்­பு­றுத்தல், மனம் நோக நடத்தல் என்­பன மன­வே­த­னைகளையும் உயி­ரி­ழப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்­தலாம். எனவே இந்த விட­யத்தில் தாம் பெற்­றெ­டுத்த குழந்­தை­களை உயி­ருடன் வாழ­வைத்­தலே தர்மம் என்ற எண்ணம் கொண்­ட­வர்­க­ளாக அன்பை மறுக்­காது அவர்­க­ளுடன் சேர்ந்து ஆலோ­சனை வழங்கி நெறிப்­ப­டுத்தி ஒழுக்க சீலர்­க­ளா­கவும் நற்­பி­ர­ஜை­க­ளா­கவும் வாழ­வைக்க வேண்­டிய கடமை இறை­வனால் பெற்­றோ­ருக்குச் சுமத்­தப்­பட்­டுள்­ளது. என்­பதை ஒரு­கணம் சிந்­திக்கக் கூடாதா? 

ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களின் மன­நி­லையைப் புரிந்து ஆராய்ந்து அறி­யாமல் எடுக்­கின்ற சில முடி­வுகள் நடை­மு­றையில் பாத­க­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன என்­பதை உண­ர­மாட்­டார்­களா? மாண­வர்கள் நம்­பித்­தெ­ரி­விக்கும் இர­க­சி­யங்­களை சந்­தர்ப்­பங்­களை சாத­க­மாக வைத்து அவர்­களை தவ­றான வழிக்கு இட்­டுச்­செல்ல முற்­ப­டு­வது, அச்­சு­றுத்­து­வது, அம்­ப­லப்­ப­டுத்­து­வது தர்­ம­மா­குமா ? 

மாணவச்  செல்­வங்­களே உங்கள்

சிந்­த­னைக்கு…

இவ்­வு­லகில் எம்மை ஈன்­றெ­டுத்த கண்­கண்ட அன்புத் தெய்­வங்கள் தாயும் தந்­தை­யுமே அவர்­களின் இன்பம் துன்பம் எல்­லாமே எமது கைகளில் தான் உள்­ளன என்­பதைத் தினமும் சிந்­திக்க மறக்­க­லாமா? இறை­பக்தி , ஒழுக்கம், அன்பு, அடக்கம், அமைதி, பிறரை மதித்தல் 

என்­ப­வற்­றுடன் முடி­யு­மா­ன­வரை ஓய்­வின்றி முயற்சி செய்து கல்வி கற்று எதிர்­கா­லத்தில் பொருத்­த­மான தொழில்­வாய்ப்­புக்­களைப் பெற்று இன்­ப­மாக வாழ முடி­யாதா?

ஒழுக்கமீறல்கள், காதல் வயப்படுதல் என்பன பாடசாலைப் பருவத்தில் பொருத்த மானவையா? நாமும் நம் வாழ்க்கையைச் சீரழித்து ஒருவரினதோ அல்லது பலரது வாழ்க்கையையும் சீரழிப்பது பொருத்தமானதா? எமது தாய் தந்தையருக்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய கடமைகள், பணிகள் எத்தனை ஏராளம் உள்ளன என்பதை சிந்தித்து  நாம் உலகில் இன்பமாக வாழப் பிறந்தவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கல்வி கற்க வேண்டிய காலத்தை வீணே சீரழிக்காமல் பயன்பெற்று சிறந்த வேலைவாய்ப்பைப் பெற்று வயது, பருவம் என்பனவற்றுக்கேற்ப பொருத்தமான காலத்தில் பொருத்தமான முடிவுகளை எடுக்கவேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. என்பதை உணரக்கூடாதா? 

கோணேசபிள்ளை சிறீஸ்கந்தா

உதவிக் கல்விப் பணிப்பாளர்

(முகாமைத்துவம் )

வலயக்கல்வி அலுவலகம்    

 திருகோணமலை