வவுனியா இலுப்பையடி பகுதியில் பேருந்துக்காக காத்து நின்ற பொதுமக்கள் மீது மது போதையில் வந்த இரு இளைஞர்கள் அங்கு நின்றவர்களிடம் பலவந்தமாக பணம் வசூலிக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் அங்கிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட நபரொருவர் மீது கண்மூடிதனமாக தாக்குதல் நடத்தியதுடன் குறிப்பிட்ட நபர் அவ்விடத்திலிருந்து தப்பி செல்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏறி தப்பிக்க முயன்றவேளை முச்சக்கர வண்டியை வழிமறித்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் குறிப்பிட்ட இளைஞர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் முறைப்பாட்டை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.