பஸ்ஸர - பெல்கஹதென்ன பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவர் பாடசாலையிலிருந்து வந்து இரவு நேரத்தில் பாடம் படித்து கொண்டிருந்துள்ளார்.பின்னர் வீட்டில் சகலரும் நித்திரை செய்த பின்னரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.