டெங்கினால் வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24 பேர் பாதிப்பு

Published By: Priyatharshan

08 Jul, 2017 | 10:29 AM
image

வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் ஒருவாரத்தில் 24பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதாரப்பரிசோதகர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதியிலிருந்து நேற்று 7 ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியில் வவுனியாவில் டெங்கு நுளம்பு தொற்றுக்குள்ளாகிய 25 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த இராசரட்ணம் சுகந்தன் 33 வயதுடைய குடும்பஸ்தர் 4 ஆம் திகதி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்றுக்காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் இவர் அடிக்கடி கொழும்பிற்குச் சென்று வருவதாகவும் காலம் தாழ்த்தி வைத்திய சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் டெங்குத் தொற்றிற்குள்ளாகி சிகிச்சை மேற்கொள்ளத்தவறியுள்ளதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகத் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அதிகமானவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்கே அதிக டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு வெளி மாவட்டங்களுக்கு குறிப்பாக கொழும்புக்கு சென்று வருபவர்களுக்கே அதிகம் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தங்கு வேலைகளுக்குச் செல்பவர்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திசாலைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளுமாறும் டெங்கு தொற்று இனங்காணப்பட்டால் அதற்கான சிகிச்சைகளை உடன் மேற்கொள்ளுமாறும் காலம் தாழ்த்தி சிகிச்சை பெறுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 காலம் தாழ்த்தி சிகிச்சை மேற்கொள்வதால் டெங்கு நோய் அதிகம் பரவி டெங்கு நோயினை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ளதாலே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51