மஹிந்த அர­சாங்­கத்தின் ஊழல் நல்­லாட்­சி­யிலும் தொடர்­கின்­றது

09 Jul, 2017 | 12:08 AM
image

மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் ஊழல் செயற்­பா­டுகள் இன்றும் தொடர்­கின்­றன. எனவே ஊழல் செயற்­பா­டுகளை விசா­ரணை செய்ய தனி­யான நீதி­மன்ற பிரி­வொன்று நிறு­வப்­பட வேண்டும் என ஊழல்  எதிர்ப்பு முன்­னணி தெரி­விக்­கின்­றது.

மாத்­தறை – மத்தள அதி­வேக வீதிக்கு கடந்த அர­சாங்கம் செல­விட்ட தொகை­யினை விடவும் தற்­போ­தைய அர­சாங்கம் அதி­க­ளவு செல­வி­டு­வ­தாக அவ்­வ­மைப்பின் ஒருங்­கி­ணைப்­பாளர் அக­லங்க ஹெட்­டி­ய­ராச்சி குற்றம் சாட்­டினார்.

ஊழல் எதிர்ப்பு முன்­ன­ணியின்   தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியில் அதி­வேக வீதி நிர்­மா­ணிப்பு பணி­களின் போது ஊழல் பண மோசடி இடம்­பெற்­ற­தாக கூறப்­பட்­டது. அவ்­வா­றான மோச­டி­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவே நல்­லாட்சி ஒன்­றினை உரு­வாக்க மக்கள் வாக்­க­ளித்­தனர்.

ஆனால் மக்கள் ஆணைக்கு முர­ணாக செயற்­படும் இன்­றைய அர­சாங்­கமும் ஊழல் எதிர்ப்பு செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது.   மாத்­தறை – மத்தள - அதி­வேக வீதியின் பணி­க­ளி­லேயே இவ்­வா­றான மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன.

கடந்த ஆட்­சியில் இந்த 96 கிலோ மீற்றர் தூரத்­தி­லான இந்த அதி­வேக பாதை­யினை 242 பில்­லியன் செலவில் அமைக்க திட்­ட ­மிட்­டி­ருந்­தனர். அதற்­கான ஆலோ­ச­கர்­க­ளுக்கு 12 பில்­லியன் ரூபா  ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த அதி­வேக வீதி நான்கு   கட்­டங்­க­ளாக  நிர்­மா­ணிக்­கப்­பட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதன் பணிகள் சீன நிறு­வனம் ஒன்­றுக்கு பொறுப்­ப­ளிக்­கப்­பட்­டி­ருந்­தன. எவ்­வா­றா­யினும் இத்­திட்­டத்­திற்­கான செல­வுகள் அளவை குறிப்­பிட்டு தயா­ரிக்­கப்­பட்ட குறை நிரப்பு பிரே­ர­ணை­யிலடங்­கி­யுள்ள விட­யங்கள் உண்­மைக்கு புறம்­பா­ன­வை­யாகும் 

புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததும் அதன் முத­லா­வது பெருந்­தெ­ருக்கள் அமைச்­ச­ராக கபீர் ஹாசீம் நிய­மிக்­கப்­பட்டார். அவர் எம்.பீ.எஸ் பிர­னாந்து தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட பொறி­யிய­லாளர் குழு­விற்கு மேற்­கு­றிப்­பிட்ட அதி­வேக வீதிக்­கான குறை நிரப்பு பிரே­ர­ணையை மீள ஆரா­யு­மாறு பணித்தார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திக­தி­யன்று அமைச்­ச­ருக்கு இது குறித்த அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டது.   அந்த அறிக்­கையில் கடந்த அர­சாங்கம் மேற்­படி அதி­வேக வீதியை அமைப்­ப­தற்­கான பணி­க­ளுக்கு செல­வாகும் பணத்­தினை விடவும் 40 வீதம் அதி­க­மாக இட்டே குறை நிரப்பு பிரே­ர­ணையை தயா­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

 அதேபோல் அதி­வேக வீதி நிர்­மாண பணி­க­ளுக்­காக 123 பில்­லியன் ரூபா­வினை செல­விட்டால் மாத்­திரம் போது­மா­னது எனவும் அக்­குழு அறி­வு­றுத்­தி­யி­ருந்­தது. இருப்­பினும் தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த அர­சாங்கம் செல­விட்ட தொகை­யையே  செல­விட்டு  இந்த வீதி நிர்­மாண பணி­களை முன்­னெ­டுப்­பது கசப்­பான உண்­மை­யாகும்.

 எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்மையில் ஊழல் தொடர்பில் ஆராயும் நிறுவனங்களை தன்னிடத்தில் தந்தால் 3 மாதங்களில் பெருந்தொகையானோரை கூண்டில் ஏற்றுவதாக கூறியிருந்தார்.எனவே ஊழல் செயற்பாடுகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றத்தில் தனியான ஒரு அலகை நிறுவி அதன் கீழ் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35