இலங்கை பாட­சா­லை­கள் மெய்­வல்­லுநர் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட 87ஆவது சேர். ஜோன் டார்பட் - ரிட்ஸ்­பெரி சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் 138 புள்­ளி­களைப் பெற்ற நீர்­கொ­ழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்­லூ­ரியும் பெண்கள் பிரிவில் 253 புள்­ளி­களைப் பெற்ற வலல்ல ஏ. ரத்­நா­யக்க மத்­திய கல்­லூ­ரியும் ஒட்­டு­மொத்த சம்­பி­ய­னா­கின.

திய­கம மஹிந்த ராஜபக்ஷ வி­ளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­முன்­தினம் நிறை­வு­பெற்ற இப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் கொட்­டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்­லூரி 133 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்­தையும் வலல்ல ஏ. ரத்­நா­யக்க மத்­திய கல்­லூரி 130 புள்­ளி­க­ளுடன் மூன்றாம் இடத்­தையும் பெற்­றன.

பெண்கள் பிரிவில் இரத்­தி­ன­புரி சுமனா மகளிர் வித்­தி­யா­லயம் 92 புள்­ளி­க­ளுடன் இரண்டாம் இடத்­தையும் வத்­தளை லைசியம் சர்­வ­தேச பாட­சாலை 76 புள்­ளி­க­ளுடன் மூன்றாம் இட­த்­தையும் பெற்­றன.

அதி சிறந்த ஆண் மெய்­வல்­லு­ந­ராக புனித சூசை­யப்பர் கல்­லூ­ரியைச் சேர்ந்த ஷெஹான் காரி­ய­வ­சமும் அதி சிறந்த பெண் மெய்­வல்­லு­ந­ராக அம்­ப­லாங்­கொடை தர்­மா­சோக கல்­லூ­ரியைச் சேர்ந்த ரித்மா நிஷா­தியும் தெரி­வா­கினர். 

இவ் வருட சிரேஷ்ட மெய்­வல்­லுநர் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் 9 சாதனைகளும் பெண்கள் பிரிவில் 6 சாதனைகளுமாக மொத்தம் 15 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.