அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஜேர்­ம­னியின் ஹம்பேர்க் நகரில் இடம்­பெறும் ஜி20  உச்­சி­மா­நாட்டின் போது ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுடன் முதல் தட­வை­யாக சந்­திப்பை மேற்­கொண்டார்.

சிரியா மற்றும் உக்­ரே­னி­லான நெருக்­க­டிகள் கார­ண­மாக இரு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வுகள் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த சந்­திப்பு இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­ச­மயம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்யா தனது செல்­வாக்கைப் பிர­யோ­கித்­த­தாக அமெ­ரிக்க தரப்­பினர் குற்­றஞ்­சாட்டி வரு­கின்­றனர். இந்­நி­லையில் டொனால்ட் ட்ரம்பும் புட்டினும் நேற்று வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் சந்­திப்பை மேற்­கொண்­டனர்.

முதல் நாள் வியா­ழக்­கி­ழமை ஜேர்­ம­னியை வந்­த­டைந்த டொனால்ட் ட்ரம்பை அந்­நாட்டு அதிபர் அஞ்­ஜெலா மெர்கெல் வர­வேற்றார்.

இதன்­போது டொனால்ட் ட்ரம்ப் அஞ்­ஜெலா மெர்­கலின் கரத்தை உறு­தி­யாகப் பற்றி குலுக்­கினார். கடந்த மார்ச் மாதம் அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையில் இடம்­பெற்ற ஒரு சந்­திப்பின் போது டொனால்ட் ட்ரம்ப் அஞ்­ஜெலா மெர்­க­லுடன் கைகு­லுக்­கு­வதைத் தவிர்த்­தி­ருந்தார்.

மேற்­படி உச்­சி­மா­நாட்டில் கால­நிலை மாற்றம் மற்றும் சர்வதேச வர்த்தகம் என்பன தொடர்பில் கவனம் செலுத்த அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள் எதிர் பார்த்துள்ளனர்.