முள்ளந்தண்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகள், மூட்டுப்பிரச்சினை உள்ளிட்ட சகலவிதமான நோய்களுக்கும் மருந்து மாத்திரைகளின்றியும் சத்திரசிகிச்சையின்றியும் இயற்கையான ஒஸ்டியோபதி வைத்திய முறையில் சிகிச்சையளிக்க முடியுமென மாலபே சுவசந்த ஆயுர்வேத வைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்தியருமான கலாநிதி சாகர கருணாதிலக்க தெரிவித்தார். 

வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கேள்வி: ஒஸ்டியோபதி சிசிக்சை முறையைப் பற்றி சற்று தெளிவுபடுத்த முடியுமா? 

பதில்: நிச்சயமாக, உண்மையில் மருந்து மாத்திரைகள் மற்றும் சத்திரசிகிச்சை இன்றி இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறையே இந்த ஓஸ்டியே சிகிச்சை முறையாகும். 

இந்த சிகிச்சை முறையானது மேற்கத்தேய நாடுகளில் மிகவும் பிரபல்யமிக்க ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கையில் இன்னும் பிரபல்யமடையவில்லை. இந்த சிகிச்சை முறையில்காணப்படுகின்ற விசேட அம்சம் என்னவென்றால் மருந்து மாத்திரை மற்றும் சத்திர சிகிச்சையின்றி நோய்களை குணப்படுத்துவதாகும். 

கேள்வி: இத்துறையில் எத்தனை வருடங்களாக இருக்கின்றீர்கள்? 

பதில்: 18 வருடங்களாக இங்கிலாந்தில் பணியாற்றினேன். அங்கு ஒஸ்டியோபதி மூலம் சிறந்த சேவையாற்றியதுடன் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது இந்த அனுபவத்தினை எமது தாய் நாட்டிற்கு வழங்க வேண்டுமென்று எண்ணினேன். அதனடிப்படையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒஸ்டியோ முறையிலான சிகிச்சையளிக்கும் நிலையத்தை இலங்கையில் ஆரம்பித்தேன். 

இன்று நாள் ஒன்றுக்கு சுமார் ஐம்பது வரையிலான நோயாளர்கள் எமது வைத்தியசாலைக்கு வருகின்றார்கள். எமது மாலபே வைத்தியசாலையில் சிகிச்சை வழங்குவது போல ரத்தினபுரியிலும் சிகிச்சை முகாம் ஒன்றினை நடத்தி வருகின்றோம். 

கேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டுவலி போன்ற வருத்தங்களுக்கு அப்பால் எவ்வாறான நோய்களை ஒஸ்டியோபதி முறையில் குணப்படுத்தலாம். 

பதில்: விசேடமாக முள்ளந்தண்டு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை வழங்கினாலும் தலைவலி (மிக்ரேன்) மரத்துப் போதல், இடுப்புவலி போன்ற பல்வேறு நோய்களை இயற்கை முறையிலான ஒஸ்டியோ முறையில் குணப்படுத்தலாம். இந்த சிசிக்சை முறையில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை. ஆகையால் அச்சமின்றி இந்த சிசிக்சை முறையினை நாடலாம். 

கேள்வி: முள்ளந்தண்டு மற்றும் மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் எந்த தரப்பினரைப் பெரிதும் தாக்குகிறது?

பதில்: ஆண், பெண் பேதமின்றி பலரையும் இந்த பிரச்சினை ஆட்கொள்கிறது. இளையோர் முதல் முதியவர் வரை இந்த நோய்களுக்கு ஆளாகின்றனர். 

உணவு பழக்கங்கள், மாசடைந்து வரும் சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 

சாதாரணமாக மூட்டு தேய்மானம் அல்லது கூன் விழுதல் போன்றவற்றுக்கு அப்பால் விபத்துக்களால் கூட மூட்டுக்களில் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அதன் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையளிக்க வேண்டும். 

சாதாரணமாக ஆர்த்தரைட்டீஸ் போன்ற நோய்கள் எல்லா வயதினருக்கும் வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. உதாரணமாக மூட்டுவலி, வீக்கம் மற்றும் மூட்டுக்களை அசைக்கும் போது சத்தம் கேட்டல் போன்றன அதன் அறிகுறிகளாகும்.எனவே இவ்வாறான காரணிகளை அவதானிக்கும் போது உடனே வைத்தியரின ஆலோசனையுடன் சிகிச்சை பெறுவது அவசியமாகும். 

கேள்வி: மருந்து மாத்திரைகள் இன்றி சிகிச்சையளிப்பது என்பது சவாலான ஒரு காரியமல்லவா?

பதில்: இல்லை எமது பாரம்பரிய வைத்தியத்தை எடுத்துப் பாருங்கள். மருந்து மாத்திரைகளின்றி சத்திரசிகிச்சையின்றி எவ்வளவு பாரிய நோய்களை எல்லாம் குணப்படுத்தியிருக்கிறார்கள். 

இது ஒரு நுட்பமான முறையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். இதற்கு முறையான பயிற்சியளிக்கப்படும். உணவு முறையிலிருந்து உடற் பயிற்சி வரை நாம் வழங்குவோம். அது தொடர்பான தெளிவூட்டல்கள் எமது வைத்தியசாலையில் வழங்கப்படுகிறது. 

சத்திர சிகிச்சை வரை சென்று திரும்பியவர்கள் அல்லது அந்த கட்டத்தை அடைந்தவர்களுக்குக் கூட நாம் ஒஸ்டியோ முறைப்படி சிகிச்சையளித்து குணப்படுத்தியுள்ளோம்.எமது சேவை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011 2054433, 011 2054499 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்றார்.