ரோபோ­வொன்று  சிறு­மி­யொ­ரு­வரை சரிந்து விழுந்த அலு­மா­ரி­யொன்றின் கீழ் சிக்கி நசுங்­கு­வ­தி­லி­ருந்து காப்­பாற்­றி­யுள்­ள­தாக  ரஷ்ய பேர்ம்  பொலி­டெக்னிக் பல்­க­லைக்­க­ழகம் உரி­மை­கோ­ரி­யுள்­ளது. 

அந்தப் பல்­க­லைக்­க­ழகம் அது தொடர்­பான காணொளிக் காட்­சி­யொன்­றையும் வெளி­யிட்­டுள்­ளது.

சுய­மாக கற்­பிக்கும் வகையில் உரு­வாக்­கப்­பட்ட புரோ­மோபொட் என்ற ரோபோவே இவ்வாறு சிறுமியை காப்பாற்றியுள்ளது. பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்த  புத்­தக அலு­மா­ரியின் மீது ஏற அந்த சிறுமி முயற்­சித்த போது அந்த அலு­மாரி அதி­லி­ருந்த கன­மான பெட்­டிகள் சகிதம் சரிந்து விழ ஆரம்­பித்­துள்­ளது. இதன்போது அங்­கி­ருந்த குறிப்­பிட்ட ரோபோ துரி­த­மாக செயற்­பட்டு அந்த அலு­மாரி சிறுமி மீது விழாமல் அதனைத் தாங்கிப் பிடித்­த­தாக   மேற்­படி பல்­க­லைக்­க­ழக நிர்­வாகம் கூறு­கி­றது.

அந்த  சம்­ப­வ­மா­னது அங்­கி­ருந்த காணொளிக் கண்­கா­ணிப்புக் கரு­வியில் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லையில் அந்த ரோபோவை உரு­வாக்­கிய நிபு­ணர்­களில் ஒரு­வ­ரான ஒலெக் கிவோ­குர்ட்ஸேவ் தெரி­விக்­கையில், தான் அந்த  சுய கற்­பித்தல் ரோபோவை இவ் ­வாறு ஆபத்து நேரத்தில் உதவும் முக­மாக  நிகழ்ச்சித் திட்டம் எத­னையும்  உள்­ள­டக்கி உரு­வாக்­கி­யி­ருக்­க­வில்லை எனவும்  இந்நிலையில் அந்த ரோபோ  சிறுமியைக் காப்பாற்றியிருப்பதாக கூறுவது எந்தளவுக்கு உண்மை என தனக்கு சந்தேகமாகவுள்ளதாகவும்  கூறினார்.