கார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ கிண்ண கால்பந்தாட்டம்

19 Nov, 2015 | 11:00 AM
image

இலங்கை கால்­பந்­தாட்ட வர­லாற்றில் அதி உயி­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான எவ். ஏ. கிண்ண நீக்கல் முறை (நொக்-­அவுட்) கால்­பந்­தாட்டப் போட்­டிகள் எதிர்­வரும் 21ஆம் திகதி தகு­திகாண் சுற்­றுடன் ஆரம்­ப­மா­க­வுள்­ளன.

இப் போட்­டி­க­ளுக்கு கார்கில்ஸ் நிறு­வனம் தொடர்ந்தும் அனுசரணை வழங்­கி­வ­ரு­வதால் இப் போட்­டிகள் கார்கில்ஸ் புட்சிட்டி எவ். ஏ. கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டிகள் என அழைக்­கப்­ப­டு­கின்­றது.


கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆரம்­பித்து இவ் வருடம் ஜூலை மாதம்­வரை நடத்­தப்­பட்ட முறை­மைப்­படி இம்­மு­றையும் நடத்­தப்­ப­ட­வுள்ள கார்கில்ஸ் எவ். ஏ. கிண்ணப் போட்­டி­களில் வடக்கு, கிழக்கு, மலை­யகம் உட்­பட நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் 500 க்கும் மேற்­பட்ட கழ­கங்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளன.


2013இல் 174 கழ­கங்கள் மாத்­திரம் பங்­கு­பற்­றி­ய­போ­திலும் கடந்த வருடம் 628 கழ­கங்கள் பங்­கு­பற்றி இலங்­கையின் எவ். ஏ. கிண்ண வர­லாற்றில் சாதனை ஒன்ற நிலை­நாட்­டப்­பட்­டது. நாடு முழு­வதும் கால்­பந்­தாட்­டத்தை வியா­பிக்கச் செய்­ய­வெண்டும் என்ற கார்கில்ஸ் நிறு­வ­னத்தின் உதவி அதிபர் றிச்சர்ட் பேஜ் மற்றும் அப்­போ­தைய இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் ரஞ்சித் ரொட்­றிகோ ஆகி­யோரின் குறிக்­கோ­ளுக்கு அமை­யவே கழ­கங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.
கடந்த வருடம் முதல் தட­வை­யாக கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் பத்­துக்கும் மேற்­பட்ட கழ­கங்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன. இவ் வரு­டமும் அதே எண்­ணிக்கை கழ­கங்கள் விளை­யாடும் என எதிர்­பார்­கப்­ப­டு­கின்­றது.


கடந்த வருடம் போன்றே இவ் வரு­டமும் கடைசி 32 அணிகள் பகி­ரங்க குலுக்கல் மூலம் அட்­ட­வ­ணைப்­ப­டுத்­தப்­படும்.
இவ் வருடம் 24 அணிகள் நிரல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் எட்டு வல­யங்­களில் முத­லி­டங்­களைப் பெறும் அணி­களும் இந்த 24 அணி­க­ளுடன் இணைக்­கப்­பட்டு பகி­ரங்க குலுக்கல் நடத்­தப்­படும் எனத் தெரி­ய­வ­ரு­கின்­றது.
நடப்பு சம்­பியன் கலம்போ எவ். சி., கடந்த முறை இரண்டாம் இடத்தப் பெற்ற களுத்­துறை புளூ ஸ்டார், இரா­ணுவம், கடற்­படை, சோண்டர்ஸ், சொலிட், அப்­கன்ட்றி லயன்ஸ், மாத்­தறை சிட்டி, றினோன், ஜாவா லேன், ஹைலேண்டர்ஸ், யாழ். சிங்கிங் ஃபிஷ், மன்னார் செய்ன்ற் ஜோசப், பொலிஸ், விமா­னப்­படை, பாணந்­துறை நியூ ஸ்டார் ஆகிய கழ­கங்கள் நேர­டி­யாக கடைசி 24 அணி­களில் 16 அணி­க­ளாக இடம்­பெறும். டொன் பொஸ்கோ ஒரு வருடத் தடைக்­குட்­பட்­டுள்­ளதால் கடந்த வருடம் 32 அணிகள் சுற்றில் சிறந்த தொல்­வியைத் தழு­விய நியூ ஸ்டார் 16ஆவது அணி­யாக ஈர்க்­கப்­பட்­டுள்­ளது.


சம்­பியன்ஸ் லீக் போட்­டி­களில் பங்­கு­பற்­றிய கழங்­களும் 24 அணி­க­ளுக்குள் இணைய வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் பிர­காரம் நிகம்போ யூத், வென்­னப்­புவை நியூ யங்ஸ், களுத்­துறை பார்க், க்றிஸ்டல் பெலஸ், பெலிக்கன்ஸ், திஹா­ரிய யூத், சுப்பர் சன், நந்­தி­மித்ர ஆகிய கழ­கங்­களும் 24 அணி­களில் நிரல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.


இப் போட்­டி­களில் சம்­பி­ய­னாகும் அணிக்கு கார்கில்ஸ் ஃபுட் சிட்டி எவ். ஏ. கிண்­ணத்­துடன் 5 இலட்சம் ரூபா பணப்பரிசும் தங்கப் பதக்கங்களும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் 250,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31