நாடு­பூ­ரா­கவும் கிராம உத்­தி­யோ­கத்தர் பணிக்கு புதி­ய­வர்­களை இணைக்கும் வரை க்கும் ஓய்­வு­பெற்­ற­வர்­களை இணைத்­துக்­கொண்­டுள்ளோம்.  1700 கிராம உத்­தி­யோ­கத்தர்கள் வெற்­றி­டத்தை நிரப்பும் நோக்கில் நடத்­தப்­பட்ட போட்டி பரீட்சை  யின் பெறு­பேறு விரைவில் வெளி­யி­டப்­படும்.

தொடர்ந்து உரி­ய­வர்கள் பணிக்கு அமர்த்­தப்­ப­டுவர். அதன்­பின்னர் கிராம உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு இணைக்­கப்­பட்ட ஒய்வு பெற்­ற­வர்­களின் பதவி தானாக இரத்­தாகும்  என உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழ­க்கி­ழமை நிலை­யியற் கட்­டளை 23 இன்  கீழ் இரண்டில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு எம்.பி தினேஷ் குண­வர்த்­தன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

தினேஷ் குண­வர்த்­தன எம்.பி , நாடு பூரா­கவும் பரந்­துள்ள கிராம சேவகர் பிரச்­சினை வெற்­றிடம் 2000 மேல் உள்­ளன. இதற்­கான போட்டிப் பரீட்சை நடத்தி பெறு­பே­று­களும் விரைவில் வெளி­யா­க­வுள்­ளன. இந் நிலையில் ஐக்­கிய தேசியக் கட்சி ஆத­ர­வா­ளர்­களை மைய­மாக கொண்டு ஓய்வு பெற்ற கிராம சேவகர்கள் நிய­மிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இது பெரும் அநீ­தி­யாகும். போட்டி பரீட்சையில் தேர்ந்­தெ­டுத்­த­வர்­களை இணைக்க முடி­யு­மாக இருக்க ஓய்வு பெற்­ற­வர்­களை ஏன் சேர்க்­கின்­றீர்கள்? என கேள்வி எழுப்­பினார்

அமைச்சர் வஜிர அபே­வர்­தன பதி­ல­ளிக்­கையில்,

இலங்­கையில் காணப்­படும் 14022 பிர­தேச செய­லகப் பிரிவில் 1700 கிராம சேவ­கர்­க­ளுக்­கான வெற்­றி­டங்கள் உள்­ளன. இதன்­பி­ர­காரம் நாடு­பூ­ரா­கவும் கிராம சேவ­கர்­க­ளுக்­கான போட்டிப் பரீட்சை நடத்­தப்­பட்டு தற்­போது பெறு­பே­றுகள் வெளி­யிட மாத்­தி­ரமே மீத­மாக உள்­ளன. கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்­க­ளுக்கு போட்டி பரீட்சை பெறு­பே­று­களின் பிர­காரம் இணைக்­க­வுள்ளோம். வடக்­கிலும் பெரு­ம­ளவில் கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான  பற்­றாக்­குறை நிலவி வரு­கின்­றது. புதி­ய­வர்­களை நிய­மிக்கும் வரைக்கும் ஓய்வு பெற்ற கிராம உத்­தி­யோ­கத்­த­ர்­களை நிய­மிப்­ப­தற்கு பெயர்ப் பட்­டியல் பெற்றுத் தரு­மாறு எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்­த­னிடம் கோரி­யுள்ளேன்.

கிராம உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு  2010 ஆம் ஆண்டு சுற்று நிரு­பம் பிர­கா­ரமே நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். எனவே போட்டி பரீட்சை பெறு­பேறு விரைவில் வெளி­யி­டப்­படும். அதன்­பின்னர் உரி­ய­வர்கள் பணிக்கு அமர்த்­தப்­ப­டுவர். அதன்­பின்னர் கிராம உத்­தி­யோ­கத்தர் பத­விக்கு  இணைக்­கப்­பட்ட ஓய்வு பெற்­ற­வர்­களின் பதவி தானாக இரத்­தாகும் என்றார்.

இதன்­போது கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே எழுந்து ஒழுங்குப் பிரச்­சி­

னை­யொன்றை எழுப்பியபோது, அதற்கு

சபாநாயகர் கருஜெயசூரிய இடமளிக்க வில்லை. 

நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிரணி சார்பாக தினேஷ் குணவர்தனவிற்கு மாத்திரம் கேள்வி எழுப்ப முடியும்.நிலை யியற் கட்டளைக்கு எதிராக செயற்பட முடி

யாது என சபாநாயகர் கருஜயசூரிய  குறிப் பிட்டார்.