நான் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரைக்கும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை இல்­லாமல் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­க­மாட்டேன். வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையை தயா­ரிப்­ப­தற்கு தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம்.  இது­வரை எந்­த­வொரு அறிக்­கையும் தயா­ரிக்­கப்­ப­ட­வு­மில்லை. வெளி­யி­ட­வு­மில்லை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் திட்­ட­வட்­ட­மாக  தெரி­வித்தார்.

உப குழுவின் அறிக்­கைக்கு மாறாக வேறு ஏதா­வது அறிக்கை  வெளி­யி­டப்­பட்­டி­ருந்தால் அந்த ஆவ­ணத்தை தன்­னிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு தினேஷ் குண­வர்­தன எம்.பி கோரினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழ­கி­ழமை நடை­பெற்ற கடற்­தொழில் நீர்வாழ் உயி­ரின வளங்கள் திருத்த சட்­ட­மூலம் மற்றும் வணிக கப்­பற்­தொழில் சட்­டத்தின் கீழ் ஒழுங்­கு­வி­திகள் மீதான விவாத்தின் போது,

 வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தனக்கு கிடைக்­க­பெற்­றுள்­ள­தா­கவும் இதில் நாட்டை பிள­வுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த அறிக்­கை­யையா அர­சாங்கம் வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ளது? என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு எம்.பி தினேஷ் குண­வ­ரத்ன எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

நான் வழி­ந­டத்தல் குழுவின் தலை­வ­ராக இருக்கும் வரைக்கும் பெளத்த மதத்­திற்­கான முன்­னு­ரி­மையை இல்­லாமல் செய்­வ­றத்கு இட­ம­ளிக்­க­மாட்டேன். வழி­ந­டத்தல் குழு­வினால் இது­வரை எந்­த­வொரு அறிக்­கையும் தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. அதனை விடுத்து வழி­ந­டத்தல் குழு­வினால் ஒரு சரத்து கூட தயா­ரிக்­கப்­ப­ட­வில்லை. 

வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை தயா­ரிக்­கப்­பட்டால் நாம் முதலில் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபைக்கே சமர்ப்­பிப்போம். தற்­போ­தைய  அர­சி­ய­ல­மைப்­பினுள் உள்­ள­டக்­கப்­பட்­ட­வை­க­ளுக்கு மாற்­ற­மான யோச­னை­களும் கிடைக்­க­பெற்­றுள்­ளன. இருந்த போதிலும் அதனை நாம் அறிக்­கையில் உள்­ள­டக்­க­வில்லை. பெளத்த முன்­னு­ரிமை நீக்க மாட்டோம் என மகா­நா­யக்க பீடங்­க­ளுக்கு நான் வாக்­கு­றுதி அளித்­துள்ளேன். பெளத்த மத தொடர்­பான முன்­னு­ரிமை விட­யத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் சுதந்­திரக் கட்­சியும் ஒரு நிலைப்­பாட்­டி­லேயே உள்­ளன. பெளத்த மதத்­திற்கு எதி­ரான எந்த தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இந்த விட­யத்தில் பூரண இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். தற்­போ­தைக்கு வழி­ந­டத்தல் குழுவின் அறிக்­கையை தயா­ரிப்­ப­தற்கு பேச்­சு­வார்த்தை நடத்த வரு­கின்றோம். எனினும் அதற்கு மாறாக இன்னும் அறிக்கை வெளி­யி­ட­வில்லை.

பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை பிர­காரம் வழி­ந­டத்தல் குழுவின் அறிக்கை மாத்­தி­ரமே வழங்க முடியும். நாங்கள் எந்­த­வொரு அறிக்­கை­யையும் வெளி­யி­ட­வில்லை. வழி­ந­டத்தல் குழு­வினால் உப குழுவின் அறிக்கை மாத்­தி­ரமே வெளி­யி­டப்­பட்­டன. அதனை தவிர இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

 பண்­டா­ர­நா­யக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கில் நானும் இருந்தேன். அதில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படவில்லை. உப குழுவின் அறிக்கை மாத்திரமே வெளியிடப்பட்டது. அதற்கு மாறாக வேறு ஏதாவது அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் அந்த ஆவணத்தை என்னிடம் கைளியுங்கள் என்றார்.