குச்சவெளி கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 உள்ளுர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வழலகழளப்பயன்படுத்திய மீன்பிடியில் ஈடுபட்டபோதே குறித்த 5 மீனவர்களும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலை, படகு மற்றும் 130 கிலோ கிராம் நிறையுடைய மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர்,திருகோணமலை மீன்பிடித்துறை அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கையளித்துள்ளனர்.