இறைசிக்காக வெட்டப்படும் கட்டாகாலி மாடுகள் : யாழ் தீவக மக்கள் விசனம்

Published By: Priyatharshan

06 Jul, 2017 | 03:53 PM
image

யாழ்.தீவக பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இவ்வாறான சம்பவத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.தீவக பகுதிகளில் குறிப்பாக புங்குடுதீவு மற்றும் வேலணை பகுதிகளில் சட்டத்திற்கு மாறாக கால் நடைகளை இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

புங்குடுதீவை பொறுத்தளவில் வாழ்வாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களே அதிகம் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். மேலும் பெருமளவில் கட்டாக்காலி கால்நடைகளும் காணப்படுகின்றன.

இவற்றை விசமிகள் சிலர் பிடித்துச் சென்று பற்றைகளுக்குள் வைத்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக வெட்டும் சம்பவங்கள் நாளாந்தம் இடம்பெறுகின்றது. குறிப்பாக பசுமாடுகளும் கூட வெட்டப்பட்டு இறைச்சி  தீவகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு கொண்டிருக்கின்றது. இது தொடர்பாக பிரதேச செயலகம் மற்றும் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டபோதும் போதுமான அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேவேளை புங்குடுதீவை சேர்ந்த இளைஞர்கள் கட்டாக்காலி கால்நடைகளை பிடித்து ஒரு இடத்தில் பட்டி அமைத்து பராமரிப்பதற்கும் அவற்றிலிருந்து பயனை பெற்று தீவக பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தபோது அது மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு குழப்பங்கள் உருவாகியிருக்கின்றது.இவ்வாறன நிலையில் அத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பெருமளவு கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வருகின்றமையினை தடுத்து நிறுத்துவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் இதுவரை எவராலும் முன்னெடுக்கப்படவில்லை.இளைஞர்களும்,சமூக அமைப்புக்களும் தடுக்க நினைக்கும்போது அதற்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கால்நடைகள் வேட்டையாடப்படுகின்றன.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகள் தேவை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04