‘தெலுங்கு படங்களில் நடிப்பதைக் காட்டிலும் தமிழ் படங்களிலும் நடிக்கவே விரும்புகிறேன். இங்கு எனக்கு கிடைக்கும் தொழில் சுதந்திரம் மற்றும் சௌகரியங்கள் வேறு எங்கும் கிடைப்பதில்லை. நல்ல கதைகளும், நல்ல வாய்ப்புகளும் என்னைத் தேடி வருகின்றன. அதே சமயத்தில் நான் முதுநிலை வணிக மேலாண்மை கல்வியையும் கற்று வருகிறேன். அதனால் இரண்டுக்கும் போதிய இடைவெளி கொடுத்துக் கொண்டேத்தான் நடிக்கிறேன். தற்போது தமிழில் பண்டிகை என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இதனையடுத்து நடிகர் சந்திரனுடன் ‘ரூபாய், நடிகர் விமலுடன் ‘மன்னர் வகையறா,’ அறிமுக நடிகர் தமிழ் உடன் ‘ என் ஆளோட செருப்ப காணோம், ’ நடிகர் கதிருடன் ‘பரியேறும் பெருமாள் ’ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். ’ என்றார் நடிகை ஆனந்தி.

ஆனால் ஆனந்தி நடித்து வரும் படங்களின் படபிடிப்பு அனைத்தும் முடிந்துவிட்டது என்றும், இவர் தற்போது நடிகர் கிருஷ்ணா உடன் நடித்த ‘பண்டிகை ’படத்தின் விளம்பரத்திற்காக சென்னையில் முகாமிட்டிருக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார்கள் திரையுலகினர்.