சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

Image result for வெங்காயத்தின் விலை அதிகரிப்பு virakesari

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை  350ரூபா தொடக்கம் 400 ரூபா வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில வாரங்களுக்கு முன்னர் அதன் விலை 150 ரூபாவுக்கும் 200 ரூபாவுக்கும் இடைப்பட்டதாக அமைந்திருந்தது.

இந்தியாவில் பெரிய வெங்காயத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடும் விலை அதிகரிப்புக்கான மற்றுமொரு காரணம் என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.