யுத்த குற்றம் செய்திருந்தால் இராணுவத்தினருக்கு தண்டனை

Published By: Robert

06 Jul, 2017 | 10:15 AM
image

இறுதி யுத்­தத்தில் போர்­க்குற்­றங்கள் எவையும் இடம்­பெ­ற­வில்லை. இரா­ணுவம் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் யுத்த கால­கட்­டத்தில் நாட்டில் இருந்­த­னரா? குற்­றங்­களை கண்­க­ளினால் பார்த்­தார்­களா? என புதிய இரா­ணுவ தள­ப­தி­யாக பத­வி­யேற்­றுள்ள இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனா­நா­யக்க கேள்வி எழுப்­பினார். 

எல்லா விசா­ர­ணை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்க நாம் தயார்.  இரா­ணுவம் முழு­மை­யாக விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கியும் வரு­கின்­றது. எவ­ரேனும் யுத்த குற்­றங்­களை மேற்­கொண்டு இருப்பின் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­பதை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இரா­ணுவ தள­பதி லெப்­டினன் ஜெனரல் மஹேஷ் சேனா­நா­யக்க இலங்­கையின் 22 ஆவது இரா­ணுவத் தள­ப­தி­யாக பொறுப்­புக்­களை ஏற்கும் நிகழ்வு இரா­ணுவ தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்­றது. இதில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்த இரா­ணுவ தள­ப­தி­யிடம் வின­விய கேள்­வி­க­ளுக்கே மேற்­கண்­ட­வாறு பதில் தெரி­வித்தார். 

அவர் மேலும் கூறி­ய­தா­னது, 

 என்மேல் நம்­பிக்கை வைத்து ஜனா­தி­பதி என்னை நிய­மித்­துள்ளார். அந்த நம்­பிக்­கையை காப்­பாற்­றுவேன். அதேபோல் இரா­ணு­வத்­தினர். இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொண்டு எனது பய­ணத்தை நாம் முன்­னெ­டுத்து செல்வேன். 

கேள்வி:- இரா­ணு­வத்­தினர் மீது தொடர்ச்­சி­யாக போர்க்­குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்­நி­லையில் புதிய இரா­ணுவ தள­ப­தி­யாக எவ்­வாறு  நீங்கள் இந்த குற்­றச்­சாட்­டு­களை கையா­ள­வுள்­ளீர்கள்?

பதில்:- இரா­ணு­வத்தின் ஒழுக்­கமே இரா­ணு­வத்தின் பல­மாகும். அர்ப்­ப­ணிப்பும் ஒழுக்­கமும் இல்­லா­விட்டால் இரா­ணு­வமும் இல்லை. வெறு­மனே சீரு­டைக்குள் மாத்­திரம் இரா­ணு­வத்தை அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யாது. யுத்தக் குற்­றச்­சாட்­டு­களை எம்­மீது முன்­வைக்கும் நபர்கள் உண்­மையில் யுத்த கால­கட்­டத்தில் நாட்டில் இருந்­த­னரா? குற்­றங்­களை கண்­க­ளினால் பார்த்­தார்­களா? என்­பதில் சந்­தேகம் உள்­ளது. எனினும் இரா­ணுவம் போர்க்­குற்­றங்­களை செய்­ய­வில்லை என என்னால் உறு­தி­யாக கூற­மு­டியும்.  குற்றச் சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.எல்லா விசா­ர­ணை­க­ளுக்கும் முகங்­கொ­டுக்க நாம் தயார்.  அவை தொடர்பில் இரா­ணுவம் முழு­மை­யாக விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கியும் வரு­கின்­றது. எவ­ரேனும் யுத்த குற்­றங்­களை மேற்­கொண்டு இருப்பின் அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­படும். இரா­ணுவம் குற்­றத்தை செய்­து­விட்டு தப்­பிக்க முடி­யாது என்­பதை நான் உறு­தி­யாக கூறு­கின்றேன். 

கேள்வி:- நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற குற்­றங்­களில் இரா­ணுவ வீரர்கள் தொடர்பு பட்­டுள்­ளனர். அவ்­வாறு இருக்­கையில் இவர்­க­ளுக்கு எதி­ரான ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைகள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­படும்?

பதில்:-  இலங்­கையில் இரண்டு இலட்சம் இரா­ணுவ வீரர்­கள உள்­ளனர். அவர்­களில் ஒரு சிறிய அளவில் குற்­ற­வா­ளி­களும் இருக்க வாய்ப்­புகள் உள்­ளன. அதேபோல் குற்­றங்­களில் ஈடு­பட்­ட­வர்­களை அடை­யா­ள­ப­டுத்தும் போதும் முன்னாள் இரா­ணுவ வீரர், ஓய்­வு­பெற்ற இரா­ணு­வத்­தினர் என கூறு­கின்­றனர். ஆனால் வேறு ஒருவர் அல்­லது ஒரு அதி­காரி குற்றம் செய்தால் குற்­ற­வா­ளி­யென அடை­யா­ள­ப­டுத்­து­கின்­றனர். ஆகவே இரா­ணுவம் என்றால் மாத்­தி­ரமே விசே­ட­மாக அடை­யா­ள­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. எனினும் குற்­ற­வா­ளி­க­ளுக்கு இரா­ணுவ சட்­டத்தின் பிர­காரம் நட­வ­டிக்கை எடுக்­க­படும். 

கேள்வி:- வடக்கில் பொது­மக்­களின் காணிகள் இரா­ணு­வத்தின் வசம் உள்­ள­தென தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது, அதேபோல் வடக்கின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் என அர­சியல் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது, அதேபோல் வடக்கில் இருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்ற வேண்டும் என வடக்கின் அர­சியல் வாதிகள் கூறு­கின்­றனர், இந்­நி­லையில் இரா­ணுவம் எவ்­வா­றான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது? 

பதில்:- நான்  14 மாதங்­க­ளாக யாழ் கட்­டளை தள­ப­தி­யாக கட­மை­யாற்­றிய பின்னர் தான் இரா­ணுவ தள­ப­தி­யாக கடமை ஏற்­றுள்ளேன். நான் வடக்கில் இருந்த காலத்தில் சரி­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்ளேன். மேலும் யுத்தம்  முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு இன்று எட்டு ஆண்­டுகள் ஆகின்­றன. வடக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­களும் எமது நாட்டின் மக்கள். ஆகவே மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுத்­தர வேண்­டி­யது அர­சாங்­கத்­தி­னதும், இரா­ணு­வத்­தி­னதும் கட­மை­யாகும். வடக்கில் பொது­மக்­களின் நிலங்­களை இரா­ணுவம் கைப்­பற்றி இருக்கும் என்றால் அது யுத்த காலத்தில் மற்றும் யுத்­தத்தின் பின்­ன­ரான நெருக்­கடி காலத்தில் மாத்­தி­ர­மே­யாகும். ஆனால் இன்று நிலை­மைகள் அவ்­வாறு அல்ல, வடக்கில் என்ன நடக்­கின்­றது என்­பது எமக்கு நன்­றாக தெரியும். ஆகவே வடக்கில் கட்­டா­ய­மாக இரா­ணு­வத்தின் வசம் இருக்­க­வேண்­டிய மற்றும் பாது­காக்க வேண்­டிய இடங்­களை தவிர ஏனைய இடங்­களை மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வது நியா­ய­மான கார­ணி­யா­கவே கரு­து­கின்றோம். இது தேசிய பாது­காப்­பிற்கு  அச்­சு­றுத்தல் இல்லை. தேசிய பாது­காப்பு தொடர்பில் அர­சியல் வாதிகள் மேடை­களில் பேசு­வதில் அர்த்தம் இல்லை. விட­யப்­ப­ரப்பு எமக்கு மாத்­தி­ரமே தெரியும். 

 கேள்வி:- நாட்டில் இஸ்­லா­மிய பயங்­க­ர­வாத அமைப்­பான ஐ. எஸ் பயங்­க­ர­வா­தி­களின் தாக்­குதல் எச்­ச­ரிக்கை உள்­ள­தாக கடந்த வாரம் பிர­தான ஊட­கங்கள் செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன. இது குறித்த தக­வல்கள் கிடைத்­துள்­ள­னவா?

பதில்:- இது குறித்து பாது­காப்பு செய­லா­ளரும் எமக்கு தெரி­வித்தார். ஆனால் உறு­தி­யான அறிக்கை ஒன்று எமக்கு கிடைக்­கப்­பெ­ற­வில்லை. ஆனால் ஒரு­சில அமைப்­புகள் தமது இருப்பை தக்­க­வைக்க இவ்­வா­றான கருத்­துக்­களை முன்­வைக்­கவும் முடியும். அவ்­வா­றான ஒன்று இருக்­கு­மாயின் பாது­காப்பு படை­யினர் தயார் நிலையில் தான் உள்­ளனர். நாம் ஆராய்ந்து தான் வரு­கின்றோம். புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்தும் ஆராய்ந்து வரு­கின்­றனர். 

கேள்வி:- யுத்த குற்றம் தொடர்­பி­லான குற்­றச்­சாட்டு தொடர்பில் இரா­ணு­வத்­தினுள் உள்­ளக விசா­ர­ணைகள் எவ்­வாறு முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது?

பதில்:- யுத்த குற்றம் தொடர்பில் எவ்­வாறு உள்­ளக விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது, எத்­தனை பேரை விசா­ரிக்­கின்­றனர் என்­பதை நாம் ஆராய்ந்தே கூற வேண்டும். ஆனால் குற்­றங்கள் தொடர்பில் இரா­ணுவ விசா­ர­ணைகள் எப்­போதும் இடம்­பெறும். எமது கட­மையை நாம் சரி­யாக நிறை­வேற்ற வேண்டும். அதில் உறு­தி­யாக உள்ளோம். 

கேள்வி:- சரத் பொன்­சே­காவின் பின்னர் எந்­த­வொரு இரா­ணுவ தள­ப­தி­யாலும் இலங்­கையின் இரா­ணுவம் குற்றம் இழக்­க­வில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக கூற­மு­டி­யாது போயுள்­ளது . இன்றும் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு சர்­வ­தேச நாடுகள் தடை விதித்­துள்­ளது, எமது இரா­ணு­வத்தை தண்­டிக்கும் நட­வைக்கை நிறை­வேற்­றப்­பட்டு வரு­கி­னது, நீங்கள் எவ்­வாறு இதை கையா­ள­வுள்­ளீர்கள்?

பதில்:- அதை நானும் ஏற்­றுக்­கொள்­கின்றேன், எமது நிலைப்­பாட்டை நாம் தெளி­வாக முன்­வைக்­க­வில்லை, குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் நாம் முன்­வைக்கும் அறிக்­கைகள், தவ­கல்கள் எவையும் உறு­தி­யா­ன­தாக அமை­ய­வில்லை. அதில் குறை­பா­டுகள் இருக்கும் என்றால் எனது தலை­மையில் இதில் மாற்றம் காணும். யுத்த காலத்தில் எமது இலக்கு யுத்­தத்தை முடிக்க வேண்டும் என்­பது மட்­டு­மே­யாகும். அப்­போதில் இருந்து மாற்று வழி­மு­றைகள் சரி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அப்­போது சரி செய்ய வேண்­டிய ஒரு காரி­யத்தை இப்­போது செய்ய வேண்­டிய தேவை உள்ளது. ஆகவே குறிகிய காலத்தில் இதற்கான தீர்வை காணவேண்டும். அதை நாம் முன்னெடுப்போம். 

கேள்வி:- ஊடகவியலாளர் தாக்குதல், ரதுபஸ்வல சம்பவங்களில் இராணுவமாக தனிச்சையாக செயற்பட வாய்ப்பில்லை, எனவே அரசியல் தூண்டுதல் உள்ளது என்பது இருக்க வேண்டும் என கருதுகின்றீர்களா?

பதில்:- உண்மையில் தவறுதலாக வழிநடத்தப்பட்டிருப்பின் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். உரிய இராணுவ வீரர் உண்மைகளை எம்மிடம் கூறவேண்டும். இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றது. விசாரணை செய்பவர் உண்மைகளை கண்டறிய வேண்டும். எனினும் எம்மால் உறுதியாக அதை கூற முடியாது. இவை நீதிமன்ற விசாரணைகளில் உள்ளது. எனினும் குற்றம் செய்திருந்தால் சட்டத்தின் மூலம் தண்டிக்கபட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58