இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதும் 3 ஆவது போட்டி இன்று ; யானைகள் வரும் சாத்தியம்

Published By: Robert

06 Jul, 2017 | 09:45 AM
image

இலங்கை - சிம்­பாப்வே அணிகள் மோதும் மூன்­றா­வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்நிலையில் யானைகள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும்  நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை வனஜீ வராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இவ்­விரு அணி­களும் மோதும் ஐந்து போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முத­லி­ரண்டு போட்­டிகள் காலியில் நடை­பெற்­றன.

இதில் முதல் போட்­டியில் இலங்கை அணி நிர்­ண­யித்த 316 என்ற இமா­லய வெற்றி இலக்கைத் துரத்­திய சிம்­பாப்வே அணி 6 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்­றது.

அதைத் தொடர்ந்து சுதா­ரித்­துக்­கொண்ட இலங்கை அணி இரண்­டா­வது போட்­டியில் 155 ஓட்­டங்­க­ளுக்கு சிம்­பாப்வே அணியைக் கட்­டுப்­ப­டுத்தி அபார வெற்­றி­யீட்­டி­யது.

இந்தப் போட்­டியில் பந்­து­வீச்சில் அசத்­திய இலங்கை அணியின் சந்­தகான் ஐந்து விக்­கெட்­டுக்­களை வீழ்த்­தினார். மற்­றைய வீர­ரான வனிது அறி­மு­கப்­போட்­டியிலேயே ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தி கிரிக்கெட் சாதனைப் புத்­த­கத்தில் இணைந்­து­கொண்டார்.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் மூன்­றா­வது ஒருநாள் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளன. இந்தப் போட்­டிக்­கான இலங்கை அணியில் சில மாற்­றங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

முத­லி­ரண்டு போட்­டி­களில் விளை­யா­டி­யி­ருந்த லஹிரு மது­சங்க மற்றும் அமில அபோன்ஸு ஆகியோர் நீக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு பதி­லாக சுரங்க லக்மால் மற்றும் சாமர கபு­கெ­தர ஆகியோர் அணியில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஆனாலும் இந்த இரு­வரும் விளை­யாடும் பதி­னொ­ருவர் கொண்ட அணிக்குள் இடம்­பெ­று­வார்­களா என்­பது சந்­தே­கமே. காரணம் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றி­ருந்­தது. இந்த வெற்றி அணியே எதிர்­வரும் போட்­டி­களில் தொடரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் போட்டி நடை­பெ­ற­வுள்ள ஹம்­பாந்­தோட்டை மைதா­னத்தில் கடந்த இரண்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு ஒருநாள் போட்டி நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.

அதே­வேளை இந்த மைதா­னத்தை சுற்றி காட்டு யானை­களின் நட­மாட்டம் இருக்­கின்­ற­மை­யினால் பார்­வை­யா­ளர்கள் அவ­தா­னத்­துடன் மைதா­னத்­திற்குள் வரு­மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை யானைகள் மைதானத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும்  நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருப்பதாக ஹம்பாந்தோட்டை வனஜீ வராசிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35