ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்தால் ஊழல் மோச­டிகள் வெளிவரும்

Published By: Robert

06 Jul, 2017 | 10:47 AM
image

ஊழல் தொடர்­பான விசா­ரணை  திணைக்­க­ளங்­களை  மூன்று மாதங்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி­யிடம் ஒப்­ப­டைத்தால்    இந்த  ஆர்ப்­பாட்­டங்கள், ஊர்­வ­லங்கள் எல்­லா­வற்­றையும் அவர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ருவார்.  இது­தொ­டர்பில் அமைச்­ச­ர­வையில் நீண்­ட­நேரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது என்று  அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ளரும்  அமைச்­ச­ரு­மான  ராஜித சேனா­ரட்ண தெரி­வித்தார். 

பில்­லியன் கணக்கில், கோடிக்­க­ணக்கில் ஊழல் செய்த கடந்த ஆட்­சி­யா­ளர்கள் சுதந்­தி­ர­மாக இருக்கும் பொழுது   விசா­ரணைத் திணைக்­க­ளங்­களோ,  சிறு சிறு விட­யங்­களை கையில்  எடுத்­துக்­கொண்டு விசா­ரித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற   நிதி ஊழல்கள்,  கொலைகள் அனைத்தும்  எமக்குத் தெரியும். ஆனால் எந்த நட­வ­டிக்­கையும் இடம்­பெ­றாமல் உள்­ளன என்றும் அவர்  குறிப்­பிட்டார். 

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற  அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு  குறிப்­பிட்டார். 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்:

கேள்வி: அமைச்­ச­ரவைக் கூட்டம்  மிகவும் சூடாக இருந்­த­தாமே?

பதில்: அப்­படி இல்லை.  அமைச்­ச­ரவை அலு­வ­லகம் குளி­ரூட்­டப்­பட்­டுள்­ளது.  எனவே சூடாக இருக்­க­வில்லை. மிகவும் குளி­ராக இருந்­தது.  

கேள்வி:  ஊழல் நட­வ­டிக்கை விசா­ரணை தொடர்பில்  சூடாக பேசப்­பட்­ட­தாமே?

பதில்: அது தொடர்பில் வாதப் பிர­தி­வா­தங்கள்  இடம்­பெற்­றன. குறிப்­பாக   நிதிக் குற்­றப்­பு­ல­னாய்வு,   ஊழல் விசா­ரணை செய­லகம் என்­பன  செயற்­படும் விதம் தொடர்பில் தனக்கு திருப்தி இல்­லை­யென ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். 

அதனை  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஏற்­றுக்­கொண்டார். அதா­வது   மிகப்­பெ­ரிய அள­வி­லான ஊழல்  மோசடி சம்­ப­வங்கள், திருட்­டுகள், கொலைகள் கடந்த காலத்தில்  இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் சிறு­சிறு விட­யங்கள் தொடர்­பி­லேயே விசா­ர­ணைகள் நடை­பெற்று வரு­கின்­றன. குறிப்­பாக இரா­ஜாங்க அமைச்சர் பௌசி  கார் ஒன்றை   ஒரு அமைச்­சி­ட­மி­ருந்து இன்­னொரு அமைச்­சுக்கு கொண்டு சென்­றமை தொடர்­பாக  விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆனால் மிகப்­பெ­ரிய  ஊழல்கள்  தொடர்பில்   விசா­ரணை நடை­பெ­று­வ­தில்லை.  உதா­ர­ண­மாக ஊழல் விசா­ரணை செய­லகம் ஒன்று உள்­ளது. அதில்  ஆறு விசா­ர­ணை­யா­ளர்கள் உள்­ளனர்.  ஒரு விசா­ரணை ஆலோ­சகர் உள்ளார்.    ஐந்து ஆலோ­ச­கர்­களும்  ஐந்து பணிப்­பா­ளர்­களும் உள்­ளனர்.  குறைந்­த­பட்சம் விசா­ர­ணை­யா­ளர்­களின் எண்­ணிக்­கை­யா­வது அதி­க­மாக இருக்­க­லாமே. அது­மட்­டு­மின்றி மாத­மொன்­றுக்கு 12 மில்­லியன் ரூபா செலவும் இடம்­பெ­று­கி­றதாம். முடிவில் சிறிய சம்­ப­வங்கள் தொடர்­பி­லேயே   விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.  என்ன நடக்­கின்­றது என்றே புரி­ய­வில்லை.

கேள்வி: பிர­த­மரின் நிலைப்­பாடு எவ்­வாறு  உள்­ளது.?

பதில்: இந்த நிலைமை தொடர்பில் பிர­தமர் அதி­ருப்தி வெளி­யிட்டார். நாங்­களும் அதி­ருப்தி வெளியிட்டோம்.   பில்­லியன் கணக்கில் திருட்­டு­களும் மோச­டி­களும் கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­றுள்­ளன.    அவை தொடர்பில் எந்த முன்­னேற்­றமும் இல்லை.   அனை­வரும்  அதி­ருப்திவெளி­யிட்­டனர். 

கேள்வி: ஊழல் எதிர்ப்பு செய­ல­கத்தை  மூடு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­கி­றது. அப்­ப­டி­யாயின் இது­வரை காலம் செல­விட்ட நிதிக்கு யார் பொறுப்பு கூறு­வது?

பதில்: அர­சாங்கம் இன்னும் அதனை மூடு­வ­தற்கு தீர்­மா­னிக்­க­வில்லை. 

கேள்வி: இந்த ஊழல் மோடி  விசா­ரணைத் திணைக்­க­ளங்­களை  மூன்று மாதங்­க­ளுக்கு தனக்கு தந்தால் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி கூறி­னாரா?

பதில்: ஆம். ஜனா­தி­பதி அவ்­வாறு கூறினார்.  ஜனா­தி­ப­தி­யிடம் இதனைக் கொடுத்தால்  தற்­போது அர­சாங்­கத்­திற்கு எதி­ராக  இடம்­பெறும் ஆர்ப்­பாட்­டங்கள், போராட்­டங்கள் எல்லாம் முடி­வுக்கு வரும். கடந்த அர­சாங்­கத்தில்  மோசடி செய்த கும்­பலே  இந்த எதிர்ப்பு போராட்­டங்­களின் பின்னால் உள்­ளது என்­பது  அனை­வ­ருக்கும் தெரியும். 

கேள்வி: அப்­ப­டி­யாயின் உங்கள் அர­சி­லேயே யாரா­வது இவ்­வாறு  ஊழல் விசா­ர­ணையை தடுக்­கின்­றார்­களா?

பதில்:  அதுதான் நன்­றாகத் தெரி­கின்­றதே

கேள்வி: அவர்கள் யார்?

பதில்: அதை  எனது வாயால் கூற­வேண்­டி­ய­தில்லை.  சில விட­யங்­களை  உணர்ந்து கொள்­வ­தற்­கா­கத்தான்   வாய்க்கு மேல் மூளை  இருக்­கி­றது.  

கேள்வி: பாரிய ஊழல்கள் குறித்து விசா­ரிக்கும்  ஆணைக்­குழு   அதி­க­மான சம்­ப­வங்­களை முடித்­து­விட்­டதே?

பதில்: அது  தொடர்­பான அறிக்­கைகள்   நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.  அதா­வது  இங்கு ஒரு விட­யத்தை கூற­வேண்டும். இந்த ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை நடை­பெறும் அலு­வ­ல­கத்தில் இரண்டு ஊட­க­வி­ய­லாளர்கள் மட்­டுமே இருப்­பார்­களாம். ஆனால் சந்­தேக நபர் வாக்­கு­மூலம் அளித்­து­விட்டு வெளியே வரும் போது 22 ஊட­க­வி­ய­லா­ளர்கள்  காத்­தி­ருந்து அவரின் கருத்தை பெறு­வார்­களாம். 

அது­மட்­டு­மின்றி பத்­தி­ரி­கை­களும் மத்­திய வங்கி ஊழல் மோசடி குறித்து மட்­டுமே பக்கம் பக்­க­மாக எழு­து­கின்­றன. மாறாக   கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற மோச­டிகள் மற்றும் திரு­டர்கள் தொடர்பில் எதுவும் எழு­து­வ­தில்லை. இதன்­மூலம்   யார் யாரைக் காப்­பாற்ற முயற்­சிக்­கின்­றனர் என்று தெரி­கின்­றது. 

கேள்வி: காமினி செனரத் தொடர்­பாக அமைச்­ச­ர­வையில் பேசப்­பட்­டதா?

பதில்: அவர் தொடர்பில் பேசப்­பட்­டது.  அவர் காசு எடுத்து சென்று  வங்­கியில் வைப்­பி­லிட்­டது எல்லாம் அனை­வ­ருக்கும் தெரியும்.  ஆனால் எதுவும் நடக்­க­வில்லை. 

கேள்வி: மீண்டும் மஹிந்த ஆட்சிக்குவந் தால் மைத்திரிபால சிறிசேனவிற்கு அச்சுறுத் தல் ஏற்படும் என  நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டதா?

பதில்: அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும்.  கடந்த முறை  பாதயாத்திரை சென்றபோது  இனி ஆட்சியைப் பிடித்தால் 20 வருடங் களுக்கு இழக்கமாட்டோம் என கூறிக் கொண்டார்களாம். அதுமட்டுமின்றி கடந்த முறை வெற்றிபெற்றிருந்தால் அடுத்த 20 வருடங்களுக்கு  அவர்களின் ஆட்சி தொடர்ந்திருக்கும். மகன் மகனின் மகன் என அனைவரும் ஆட்சி புரிந்திருப்பார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58