(எம்.எப்.எம் பஸீர்)

வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக் கூடத்துடன் கூடிய சிறை வைத்தியசாலை சிகிச்சை அறையின் 3 ஆவது சிறைக் கூடத்தின் சுவரை கூரான இரும்பு ஒன்றினால் துளைத்து அதனூடாக தப்பிச் செல்ல முயன்ற  பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய சிறை கைதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன் தினம் அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சதி முயற்சியை முறியடிக்கப்பட்டதோடு அம்மூவரையும் கைது செய்துள்ளதாக வெளிக்கடை சிறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நால்வரும் சுவரை துளைத்து வெளியேறி, சிறைச் சாலை வைத்தியசாலையின் முன்னால் உள்ள பாதுகாப்பு அரணில் கடமையில் இருக்கும் அதிகரியை கொலைச் செய்துவிட்டு தப்பிச் செல்வதே திட்டமாக இருந்துள்ளமை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மனிதப் படுகொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். சில நட்களாகவே இவர்கள் சிறை சுவரை இவ்வாறு துளைக்க ஆரம்பித்துள்ளதுடன் இதன் போது சுவரை உடைக்கும் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக ஒருவர் சத்தமாக பாடல் படியவாறு புத்தி சுயாதீனம் அற்றவர் போல நடைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்டவர்களில் ஏற்கனவே மகர சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் கைதான சிறைக் கைதி ஒருவரும் இருப்பதாக வெலிக்கடை தகவல்கள் உறுதிப்படுத்தின.

எவ்வாறாயினும் இச்சம்பவத்தின் பின்னர் குறித்த நால்வரும்  வெலிக்கடை செப்பல் தடுப்பில் உள்ள அதி பாதுகப்பான நான்கு சிறைக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சிறைச் சாலை அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.