(எஸ்.ரவிசான்)

மாலபே தனியார்  மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் பயிற்சி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கொழும்பு உயர்நீதிமன்றத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஒன்றிணைந்த இலங்கையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், பல்கலைக்கழக வைத்தியப்பீட மாணவர்கள்; வைத்தியர்கள்,தாதிகள் மற்றும் சுகாதார தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பெற்றோரும் கலந்துக்கொண்டனர். 

அவிசாவலை, கடுவெல ஆகிய வைத்தியசாலைகளில் மாலபே மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு மேலதிகமாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையிலும் பயிற்சிகளை வழங்க அரசு இன்றைய தினம்  உயர்நீதிமன்றிடம் அனுமதி பெறுவது தொடர்பிலான விசாரனையின் போதே மேற்படி  இந்த ஆர்ப்பாட்டம் கொழும்பு உயர்நீதிமன்றம்    முன்பாக  முன்னெடுக்கப்பட்டது.