அதிசயம் ; நுவரெலியாவில் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம் பழம்

Published By: Priyatharshan

05 Jul, 2017 | 03:26 PM
image

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சம் பழ மரம் அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்து காய்துள்ளமையானது மக்களை வியக்கவைத்துள்ளது.

நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட இந்த மரத்திலேயே பேரீச்சம் பழம் காய்த்துள்ளது. 

இந்த மரத்தில் தற்போது 5 பேரீச்சம் பழ குலைகள் காய்த்துள்ளன.

மரம் நாட்டப்பட்டு 35 வருடங்களின் பின் இந்த பேரீச்சம் பழம் காய்த்துள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர்  தலவாக்கலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருகின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right