(க.கமலநாதன்)

நல்லாட்சி அரசாங்கத்தில் புத்தர் உயிருடன் இருந்து சிறந்த அரசாட்சி பற்றிய போதனைகளை வழங்கியிருப்பாராயின் இனவாத தேரர் என்ற பேரில் அவரும் சிறையிடப்பட்டு தண்டிக்கப்பட்டிருப்பார் என தூய்மையான ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தாய்லாந்துக்கு நிகரான சட்டங்களை அமுல்படுத்தி இலங்கையை ஆசியாவின் விபசார விடுதியாக மாற்ற நல்லாட்சி அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கொழும்பில் உள்ள  கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.