முஸ்­லிம்கள்  முக­வர்கள் மூலம் தொடர்பைப் பேணி­ய­தா­லேயே எம்மை பற்றி சரி­யான தெளிவை பெற­வில்லை ; நாமல்

Published By: Priyatharshan

05 Jul, 2017 | 11:16 AM
image

இந்த நாட்டு முஸ்­லிம்­க­ளுடன் முக­வர்கள் மூலம் தொடர்பை பேணி­யதால்தான் முஸ்­லிம்கள் எம்மை பற்றி சரி­யான தெளிவை பெற­வில்லை என அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்‌ஷ குறிப்­பிட்டார்.

திரு­கோ­ண­மலை மாவட்ட ஜம்­மிய்­யதுல் உலமா சபை தலைவர் மௌலவி கலா­நிதி நஸார் தலை­மையில் கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற கூட்­டத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எம்­மிடம் இருந்து ஆட்­சியை பறிக்க மேற்­குலகம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்­லிம்கள் சிக்­கிக்­கொண்­டனர். அதை இப்­போது அவர்கள் உண­ரு­கின்­றனர்.எம்மை சந்­திக்கும் முஸ்­லிம்கள் மூலம் நான் இதனை அறிந்­து­கொள்­கிறேன்.

அன்று மூதூர், கிண்­ணியா, காத்­தான்­குடி பிர­தே­சங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் விடு­தலை புலி­களால் கொலை­ செய்­யப்­பட்­டனர். இந் நிலையில் சுமார் முப்­பது வருட கொடூர யுத்­தத்­திற்கு நாம் முற்­றுப்­புள்ளி வைத்தோம். எமது அர்ப்­ப­ணிப்பு கார­ண­மாக வடக்கு, கிழக்கு முஸ்­லிம்கள் இன்று சுதந்­திர காற்றை சுவா­சிக்­கின்­றனர்.

அது தவிர எமது காலத்தில் வடக்கு கிழக்கில் வர­லாறு காணாத பல்­வேறு அபி­வி­ருத்தி திட்­டங்­களை நாம் மேற்­கொண்டோம்.வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் மக்­க­ளுக்­காக கேட்ட அனைத்து அபி­வி­ருத்­தி­க­ளையும் நாம் செய்­து­கொ­டுத்தோம். மக்­க­ளுக்கு அபி­வி­ருத்­திகள் தொழில் வாய்ப்­பு­க­ளுக்கும் பஞ்சம் இருக்­க­வில்லை.ஆனால் இன்று என்ன நடக்­கி­றது என்­பதை மக்கள் அறிந்­து­கொண்­டுள்­ளார்கள்.

தற்­போது முஸ்­லிம்கள் எம்மை சந்­திக்­கி­றார்கள்.எமக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக உறுதி அளிக்­கி­றார்கள்.முன்பு விட்ட தவறை நாம் இனிமேல் விடமாட்டோம்.முஸ்லிம் மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணி அவர்கள் எமக்குள்ள நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00