கொழும்பின் குப்பைகளை 3 தினங்களுக்குள் அகற்றாவிடின் அதிகாரிகள் பதவி நீக்கப்படுவர் : அமைச்சர் எச்சரிக்கை..!

Published By: Robert

05 Jul, 2017 | 10:48 AM
image

கொழும்பு மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பகு­தி­களில் குவிந்­துள்ள குப்­பைகள் அனைத்தும் எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் முழு­மை­யாக அகற்­றப்­பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேல்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மாந­கர மற்றும் நகர சபை அதி­கா­ரி­க­ளுக்கு பணிப்­புரை விடுத்தார்.

Image result for கொழும்பின் குப்பைகளை

இதனை அதி­கா­ரிகள் நடை­மு­றைப்­ப­டுத்த தவறும் பட்­சத்தில் பாரா­ளு­மன்ற அனு­மதி பெற்ற பொது­மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் பிர­காரம் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் அவ்­வ­தி­கா­ரிகள் பதவி நீக்­கப்­ப­டுவர் எனவும் அமைச்சர் எச்­ச­ரிக்கை விடுத்தார். கொழும்பு நக­ரத்தில் எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னைக்கு உட­னடி தீர்­வினை முன்­வைக்கும் நோக்கில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மேல்­மா­கா­ணத்­திற்கு பொறுப்­பான மாந­க­ர­சபை மற்றும் நகர சபை அதி­கா­ரி­க­ளுடன் விசேட சந்­திப்­பொன்று கொழும்பு மாந­க­ர­சபை கட்­டி­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது. இச்­சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கருத்து தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது எழுந்­துள்ள குப்பை பிரச்­சினை கார­ண­மாக மேல்­மா­கா­ணத்தில் பாரி­ய­ளவில் சுகா­தார சீர்­கேடு வலுப்­பெற்­றுள்­ளது. இதன் கார­ண­மாக டெங்கு உள்­ளிட்ட நோய்களால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகம்­கொ­டுத்­துள்­ளனர்.

ஆகவே உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் கொழும்பு உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களில் தேங்கி கிடக்கும் குப்­பைகள் அனைத்­தையும் முழு­மை­யாக அகற்­று­வ­தற்கு மாந­கர சபை மற்றும் நகர சபை அதி­கா­ரிகள் அனை­வரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும். மீதொட்­ட­முல்லை குப்பை மேடு அனர்த்­தத்தின் பின்னர் குப்பை இடு­வ­தற்­கா­ன­தொரு இடம் கண்­ட­றி­யப்­பட்டு வழங்­கப்­ப­டா­மையின் கார­ண­மா­கவே கொழும்பு நகரம் உள்­ளிட்ட பிர­தான நக­ரங்­களின் வீதி­களில் பாரி­ய­ளவில் குப்­பைகள் சட்­ட­வி­ரோ­த­மாக கொட்­டப்­பட்­டன.

ஆகவே இதற்­கான தீர்­வாக தற்­போது கொழும்பு மாந­க­ர­ச­பைக்­குட்­பட்ட பகு­தி­களில் சேக­ரிக்­கப்­படும் குப்­பைகள் முத்­து­ரா­ஜ­வெ­லைக்கு கொண்டு செல்­லப்­பட்டு கொட்­டப்­படும். அத்­துடன் குறித்த பகு­தியில் கொட்­டப்­படும் குப்­பை­களை மீள்­சு­ழற்சி செய்­வ­தற்கு ஏற்­ற­வ­கையில் சேக­ரிக்கப்­படும் குப்­பைகள் முழு­மை­யாக வகைப்­பி­ரித்தே மக்­க­ளி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்­ளப்­படும்.

மேலும் முத்­து­ரா­ஜவெலை பகு­தியில் குப்பை கொட்­டு­வ­தற்கு அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத எந்­த­வொரு தனியார் நிறு­வ­னத்­துக்கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­ப­துடன் குறித்த பகு­தியில் கட்­ட­ண­மின்றி குப்­பை­களை கொட்­டு­வ­தற்கும் அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. அந்­த­வ­கையில் வகைப்­பி­ரித்து கொட்­டப்­படும் குப்­பை­க­ளுக்கு குறைந்த கட்­ட­ணமும் வகைப்­பி­ரித்து வழங்­கப்­ப­டாத குப்­பை­க­ளுக்கு அதி­க­ள­வான கட்­ட­ணமும் அற­வி­டப்­படும்.

இதற்­க­மை­வாக நக­ரப்­புற பகு­தி­களில் குப்­பை­களை சேக­ரிக்கும் குப்பை வண்­டிகள் அதி­காலை 4 மணி­முதல் 6.30 வரை­யான காலப்­ப­கு­திக்குள் நக­ரத்தில் உள்ள குப்­பை­களை முழு­மை­யாக அகற்­றி­யி­ருக்­க­வேண்டும். அத்­துடன் குறித்த குப்பை வண்­டிகள் எந்த பகு­தி­களில் குப்­பை­களை சேக­ரிக்­கின்­றன என்பது தொடர்­பி­லான ஆவ­ணங்கள் அனைத்தும் அமைச்­சுக்கு சமர்ப்­பிக்­கப்­பட வேண்டும். மேலும் குறித்த குப்பை வண்­டி­க­ளுக்கு விரைவில் ஜீ.பி.எஸ் தொழி­ல்நுட்­பத்­தினை பொருத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

தற்­போது எழுந்­துள்ள குப்பை பிரச்­சி­னையை எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்கு சக­லரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும். இதனை கருத்­திற்­கொள்­ளாது செயற்­படும் அரச அதி­கா­ரிகள் பாரா­ளு­மன்ற அனு­மதி பெற்ற மக்கள் பாது­காப்பு சட்­டத்தின் பிர­காரம் உட­ன­டி­யாக அமு­லுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்­யப்­ப­டுவர். 

அத்­துடன் தாம் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பகு­தி­களில் குப்­பைகள் கொட்­டப்­பட்­டுள்ள பகு­தி­களை உட­ன­டி­யாக மாந­கர சபைக்கு அறி­விக்­க­வேண்டும். மக்கள் தாம் வழங்கும் குப்பைகளை வகைப்பிரித்து குப்பை வண்டிகளுக்கு வழங்கவேண்டும் என்றார். 

மேலும் சட்ட விரோ­த­மான முறையில் வீதி­களில் குப்­பைகள் கொட்­டு­பவர்­களை கைது செய்­வ­தற்கும் நகர்ப்­பு­றங்­களில் விசேட சுற்­றி­வ­ளைப்­புக்­களை மேற்­கொள்ள பொலி­ஸா­ருக்கும், இரா­ணு­வத்தின் உய­ர­தி­கா­ரி­க­ளுக்கும் இதன்­போது பணிப்புரை விடுத்தார். 

இச்­சந்­திப்பில் அமைச்சர் மனோ ­க­ணே­சனின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க மேல்­மா­காண சபை உறுப்­பினர் கே.ரி. குரு­சா­மியும் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08