சவூதி அரேபிய இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் இதன்போது அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள சவூதி இளவரசர், பாரிய முதலீடுகளை மேற்கொள்ளும் சவூதியின் வர்த்தகர்களை, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்காக எதிர்காலத்தில் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச் சந்திப்பின்போது, ஆரம்ப காலம் முதல் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக சவூதி வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவூதி இளவரசரிடம் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.