சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடலட்டைகள் மற்றும் ஒருவகையான கடல் தாவரங்களுடன் இருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் மன்னார், வங்காலை பொலிஸாரின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 20 பொதிகளில் அடைக்கப்பட்ட கடலட்டைகள் மற்றும் கடல் தாவரங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபர்கள் பயணித்த படகையும் 553 கிலோகிராம் கடல் தாவரத்தையும் 317 கிலோகிராம் கடலட்டைகளையும் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.