உலக நாடுகள் பல சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து வருகின்ற நிலையில் இந்த வரிசையில்  துர்க்மெனிஸ்தானும் தற்போது இணைந்துள்ளது. 

சோவியத் ரஷியாவில் இருந்து பிரிந்த துர்க்மெனிஸ்தானிலுள்ள கடைகளில் சிகரெட் மற்றும் புகையிலை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டம் கடுமையாக பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த உத்தரவை மீறினால் ரூ.1 இலட்சத்து 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.