கர்ப்பம் தரித்த பெண் ஒருவர் பிர­ச­வ­காலம் வரை தாம் எப்­படிக் கவ­ன­மாக இருக்க வேண்டும் என்­பதில் அக்­க­றை­யாக உள்ளார். தமது வயிற்றில் வளரும் சிசு­வுக்கு எவ்­வித ஆபத்­துக்­களும் வராது இருப்­ப­தற்கே எந்தத் தாயும் விரும்­பு­கின்­றனர். இந்த நிலையில் தம்­ப­தி­க­ளாக வாழ்­ப­வர்கள் தாம் கர்ப்­ப­கா­லத்தில் தாம்­பத்­திய உறவில் ஈடு­பட முடி­யுமா என்­பதில் ஒரு தெளி­வற்ற நிலைமை விளங்கி வரு­கின்­றது. புதிய தம்­ப­திகள்  இவ்­வா­றான உற­வினால் தமது கர்ப்ப காலத்­துக்கோ அல்­லது வயிற்றில் வளரும் சிசு­வுக்கோ பாத­க­மான விளை­வுகள் வந்து விடும் என ஏங்­கு­கின்­றனர். ஆனால் மூத்த சந்­த­தி­களும் வீடு­களில் உள்ள பெரிய தலை­மு­றையும் இவ்­வா­றான தாம்­பத்­திய உற­வுகள் கர்ப்­ப­கா­லத்தில் இருந்தால் பிர­ச­வ­மா­னது சாதா­ரண சுகப்­பி­ர­ச­வ­மாக அமையும், இல்­லா­விட்டால் பிர­ச­வ­மா­னது சிசே­ரி­ய­னாக மாறி­விடும் என்ற கருத்தில் உள்­ளனர்.

இந்­நி­லையில் தம்­ப­திகள் கர்ப்­ப­கா­லத்தில் இவ்­வா­றான உற­வுகள் மூல­மான நன்மை தீமைகள் எவை என்­ப­தனை அறி­வதில் அக்­க­றை­யாக உள்­ளனர். ஒவ்­வொ­ருவர் ஒவ்­வொ­ரு­வி­த­மான கருத்தை சொல்­லும்­போது சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் சரி­யான தக­வல்­களை எடுக்க முடி­யாத நிலை உள்­ளது. சில சந்­தர்ப்­பங்­களில் இவற்றை யாரிடம் கேட்­பது என்­பதில் ஒரு­வித தயக்­கமும் வெட்­கமும் நில­வு­கின்­றது.சில தம்­ப­திகள் தமது வைத்­திய நிபு­ண­ரிடம் கேட்டுத் தெரிந்­து­கொள்­கின்­றனர். சிலர் இதற்கும் ஒரு தயக்­க­மான நிலையில் இது பற்றி கதைக்­காமல் விடு­வார்கள். எனவே மக்கள் மத்­தியில் கர்ப்­ப­கா­லத்தில் தாம்­பத்­திய உற­வு­பற்றி சரி­யான தக­வல்கள் போய்ச் சேர­வேண்டும்.

கர்ப்ப காலத்தில் எந்த மாதத்தில் தாம்­பத்­திய உறவு மேற்­கொள்ள முடியும்?

கர்ப்­ப­கா­லத்தில் ஆரம்ப முதல் மாதத்தில் இருந்து இறுதி பிர­சவ காலம் வரை தாம்­பத்­திய உறவு ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டி­யது. ஆனால் சில­வித சிக்­கல்கள் உள்­ள­போது அதா­வது கர்ப்­ப­கா­லத்தில் குரு­திக்­க­சிவு, இரத்­தப்­போக்கு மற்றும் பன்­னீர்க்­குடம் உடைந்து நீர் வெளி­யேறும் நிலை, குறை­மாதப் பிர­சவ வலி, வயிற்­று­வலி உள்ள போது தாம்­பத்­திய உறவை முற்று முழு­தாக தவிர்க்க வேண்டும். அத்­துடன் கண­வ­ருக்கோ மனை­விக்கோ இலிங்க உறுப்­பு­களில் கிரு­மித்­தொற்று அல்­லது புண்­போன்­றன இருந்தால்  தொப்புள் நச்­சுக்­கொடி கீழி­ருந்தால் தாம்­பத்­திய உறவு தவிர்க்­கப்­ப­ட­வேண்டும்.

தாம்­பத்­திய உற­வினால் கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய தீமைகள் எவை?

கர்ப்­ப­கா­லத்தில் தாம்­பத்­திய உறவு மேற்­கொள்ளும் போது கர்ப்­பிணிப் பெண்­ணுக்கு சில வேளை­களில் பிர­சவ யோனி­வா­சலில் கிரு­மித்­தொற்­றுகள் ஏற்­பட முடியும். ஏனெனில் தாம்­பத்­திய உறவு என்­பது மிகவும் துப்புர­வான சுத்­தப்­ப­டுத்­தப்­பட்ட நிலையில் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. இதனால் ஆண் பெண் இலிங்க உறுப்­புக்­களில் உள்ள கிரு­மிகள் பிர­சவ வாச­லினுள் உள்­பு­குத்­தப்­பட்டு நோய்த்­தொற்று ஏற்­பட வாய்ப்­ப­ளிக்கும். இவ்­வா­றான கிருமித் தொற்­றினை கர்ப்­ப­கா­லத்தில் பன்­னீர்க்­குடம் உடைந்து திர­வ­மா­னது குறை­மா­தத்­தி­லேயே வெளி­யேற முடியும் இத­னை­ய­டுத்து குறை­மா­தப்­பி­ர­சவ வலியும் ஆரம்­பித்­து­விடும். இவ்­வா­றான குறை­மா­தப்­பி­ர­ச­வத்­தினால் சிசு­வுக்கு பல கிருமித் தொற்­றுகள், ஆபத்­துகள் வரு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன. எனவே பாது­காப்­பற்ற கர்ப்­ப­கால தாம்­பத்­திய உறவு மூலம் பிர­சவ வாசலில் கிருமி தொற்­று­க­ளுக்கு சந்­தர்ப்பம் உள்­ளது என்­பதில் கவனம் இருக்க வேண்டும்.

மேலும் கர்ப்­ப­கா­லத்தில் தொப்புள் நச்­சுக்­கொடி கர்ப்­பப்பை வாசலை மூடி­வ­ளர்ந்­தி­ருந்தால் இவ்­வா­றான உற­வுகள் மூலம் குரு­திப்­போக்கு ஆரம்­பித்­து­விடும். ஆகையால் இவ்­வா­றா­ன­வர்கள் இது­கு­றித்து அவ­தானம் தேவை­யாக உள்­ளது.

கர்ப்­ப­கா­லத்தில் தாம்­பத்­திய உறவு மூலம் பிர­சவ முறைகள் மாறுமா?

சாதா­ரண பிர­ச­வமா சிசே­ரியன் பிர­ச­வமா என்­பது கர்ப்­பத்தில் உள்ள சிசுவின் பரு­ம­னையும் அதன் அமைப்பு மற்றும் கர்ப்­பப்­பையில் இருக்கும் விதம், தாயின் இடுப்பு பருமன் என்­ப­வற்றைப் பொறுத்து தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் பிர­சவ முறை­யா­னது ஒருவர் தாம்­பத்­திய உறவில் ஈடு­பட்டார் என்­ப­தற்­காக கட்­டாயம் சாதா­ரண பிர­ச­வ­மாக அமையும். இல்­லா­விட்டால் சிசே­ரி­ய­னா­கத்தான் இருக்கும் என்ற கருத்து தவ­றா­னது. ஆனால் நிறை­மாதக் கர்ப்­பத்தில் மேற்­கொள்­ளப்­படும் தாம்­பத்­திய உற­வு­மூலம் பிர­சவ வலி­யா­னது ஆரம்­பிக்க வாய்ப்­புள்­ளது. அத்­தோடு கிருமித் தொற்­றுகள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டும்.

கர்ப்­ப­கால தாம்­பத்­திய உறவு பெண்ணின் கர்ப்ப வயிற்­றுக்கு தாக்கம் ஏற்­ப­டா­த­வாறு மேற்­கொள்ள வேண்டும். அதாவது உறவின்போது பெண் கீழே ஆண் மேலே இருந்தால் பெண்ணின் வயிற்றில் பாரம் தாங்கப்படும். இதனால் வலி ஏற்படலாம். எனவே கர்ப்பகாலத்தில் ஆண் கீழே பெண் மேலே என்ற நிலையில் உறவு மேற்கொள்வது ஆபத்தற்றது.

எனவே கர்ப்பகால தாம்பத்திய உறவு என்பது கவனமாகவும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ளவேண்டியது. இதனால் பல தீமைகளும் வரக்கூடும் என்பதில் கவனம் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் சுகப்பிரசவம் கிடைக்கும்  என்ற கருத்தில் இருந்து நாம் விடுபட வேண்டும்.