வட அமெரிக்கா கண்டத்தில் வாசிங்டனை தலை நகராகவும் நிவ்யோர்க்கை பிரதான வணிக நகராகவும் கொண்ட 50 மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாடே ஐக்கிய அமெரிக்காவாகும். வடக்கே கனடாவையும் தெற்கில் மெக்ஸிகோவையும் கிழக்கே அட்லாண்டிக் கடல் மற்றும் மேற்கே பசுபிக் கடல் என்பனவற்றை எல்லைகளாகக் கொண்ட அமெரிக்கா பரப்பளவில் ரஷ்யா கனடா என்பவற்றுக்கு அடுத்ததாக 3வது பெரியநாடாக விளங்கும் இந்நாட்டின் 45வது ஜனாதிபதியாக 2016ஆம் ஆண்டு முதல் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று வழிநடத்திச் செல்கின்றார்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த மெரிகோ வேஸ்புக்கி என்பவர் வணிக நோக்கத்திற்காக ஆசியாவை கடல் வழியாக கடக்க முற்படும் போது இன்றைய வட மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களை கண்டறிந்தார். “அவை ஆசியா கண்டமில்லை அது ஒரு புதிய உலகம்” எனக்கூறிய இவரது கருத்தே பின்னாளில் கிறிஸ்டோம்பர் கொலம்பஸ் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1501 - 1502 இல் ‘அமெரிக்கா’ என்ற பெயர் இவ் நிலப்பரப்பிற்கு பெயரிடப்பட்டது.

மேற்கு பிரித்தானியவின் ஆதிகத்தில் இருந்த அமெரிக்காவில் வரி செலுத்தல் தொடர்பில் 1775இல் பிரித்தானியாவுடன் யுத்தம் ஏற்பட்டதில் பிரித்தானியா தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1776 ஜூலை 4ஆம் திகதி முதல் தனியொரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்துக்கொண்டதுடன் தோமஸ் ஜெவர்சன் இயற்றிய அரசியலமைச்சட்டத்தின் படி ஐக்கிய அமெரிக்க இராச்சியம் உருவானது. அதன்பின் ஒரு வலுவான அரசாங்கத்தின் கீழ் ஒற்றையாட்சி குடியரசாக மாற்றம் கண்டு இன்று வல்லரசு நாடுகளில் முக்கியமான நாடாகவும் விளங்குகின்றது.

இன்று அமெரிக்கா 306 மில்லியன் மக்களுடன் 3.39 மில்லியன் சதுர மைல்கள் மொத்த பரப்பளவைக் கொண்டு நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய நாடாகவும் திகழ்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஒஃப் அமெரிக்கா, யுனைடெட் ஸ்டேட்ஸ், யு.எஸ்., யு.எஸ்.ஏ, அமெரிக்கா, தி ஸ்டேட்ஸ் என பல நாமம் கொண்டு அழைக்கப்படுகிறது.

அமெரிக்க கொடியானது வெள்ளை, நீலம் சிவப்பு ஆகிய நிறங்களில் 50 நட்சத்திரங்களையும் 13 கோடுகளையும் கொண்டுள்ளது. இந் நட்சத்திரங்கள் அந்நாட்டின், 50 மாநிலங்களையும் கோடுகள் 13 குடியேற்றங்களையும் குறித்து நிற்கின்றன. அத்துடன் அமெரிக்காவிற்குரிய மற்றுமொரு அடையாளமாக 305 அடி உயரத்துடன் (93 மீற்றர்) கம்பீரமாக வானைநோக்கி உயர்ந்து நிற்கும் சுதந்திர தேவி சிலை சுமார் 125 வருடங்களுக்கும் மேற்பட்ட ஒரு சிற்பமாகும். சுதந்திர தேவி சிலையில் ஒருகையில் விளக்கும் மற்றொரு கையில் புத்தகமும் தலையில் கிரீடமும் காணப்படுவதுடன் கையிலிருக்கும் புத்தகம் அறிவையும் அதிலிருக்கும் ஜூலை 4,1887 எனும் திகதி அமெரிக்கா ஒருவான நாளையும் குறிக்கின்றது.

அமெரிக்காவின் தேசிய பொருளாதாரம் 1870 ஆம் ஆண்டு முதல் வளரத் தொடங்கியது.  இந்நாட்டில் முதலாளித்துவக் கலப்பு பொருளாதார முறை காணப்படுவதுடன் உலகின் மிகப்பெரும் இறக்குமதியாளராகவும் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கின்றது. அத்துடன் இன்று நாம் பயன்படுத்தும் பேரளவான உற்பத்திகள் அமெரிக்காவின் கண்டுபிடிப்புக்களே. தோமஸ் அல்வா எடிசன் மின்குமிழைக் கண்டுபிடித்தமை நிகோலா டெஸ்லா அல்டர்னெடிங் மின்சாரம், ஏசி மோட்டரை உருவாக்கியமை, அலெக்சாண்டர் கிரஹம்பெல் தொலைபேசியை அறிமுகம் செய்தமை ரைட் சகோதரர்கள் விமானத்தை உருவாக்கியமை என 19 ஆம் நுற்றாண்டு முதல் இன்று வரை அமெரிக்கர்களின் கண்டுபிடிப்புக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இந் நாட்டின் டெடான் ரேஞ்சு, ரொக்கி மலைத்தொடர்களின் பகுதிகளில் அமைந்த இலையுதிர் காடுகள் மற்றும் கிரேட் லேக்ஸ் மிட்வெஸ்ட் புல்வெளிப் பகுதிகள் மற்றும் உலகின் நான்காவது நீளமாக நதியான மிசிசிப்பி - மிசௌரி நதி இந்நாட்டின் மிக உயர்ந்த சிகரமான அலாஸ்காவின் மெக்கென்லி சிகரம் போன்றன இந்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனதை வெகுவாக கவர்கின்றது.

ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகார நாடுகளில் ஒன்றாகவும் கல்வியறிவில் 99 வீதத்தையும் 78 வருட சராசரி ஆயுட்காலத்தையும்  ஊழல் குறைந்த நாடுகின் வரிசையில் 20 ஆவது நாடாகவும் தனியார் வருமானத்தில் ( 1765072 அமெரிக்க டொலர் ) 6 ஆவது நாடாகவும் திகழும் ஐக்கிய அமெரிக்கா இன்று தனது 241 ஆவது தேசிய தினத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் இத் தருணத்தில் எமது வாழ்த்துக்களும் அமெரிக்க மக்களுக்கும் உரித்தாகட்டும்.