தெற்காசிய குத்துச்சண்டை : 5 பதக்கங்களை இலங்கை கைப்பற்றும்

Published By: Priyatharshan

18 Jan, 2016 | 04:16 PM
image

(எம்.எம். சில்வெஸ்டர்)

தெற்காசிய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை 5 பதக்கங்களை கைப்பற்றும் என  இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயலாளரான மஹேஷ்  தஹநாயக்க வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இது குறித்து அவர்  மேலும் கூறுகையில், 

''இலங்கை குத்துச் சண்டை குழாமானது 10 வகையான  போட்டிப்பிரிவுகளில் பங்குகொள்ளவுள்ளது. இதில் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.

தெற்காசிய விளையாட்டு  விழாவில் பங்குகொள்ளும் இலங்கை குத்துச்சண்டை குழாமுக்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதுடன் இதில்  7 வீரர்களும் 3 வீராங்கனைகளும் அடங்குகின்றனர். 

இலங்கை குத்துச் சண்டை குழாமில் முன்னணி வீராங்கனையாகத் திகழும் அனுஷா கொடித்துவக்கு இக்குழாமில் அடங்குகின்றமை விஷேட அம்சமாகும். இவர், சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளதனால், இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவதாக குத்துச் சண்டை ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

மேற்படி தெற்காசிய குத்துச்சண்டை போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05