சைட்டம் பிரச்­சி­னைக்கு தீர்வு காணா­விடின் வைத்­தியர் பற்­றாக்­குறை ஏற்­படும் அபாயம்

Published By: Robert

04 Jul, 2017 | 09:32 AM
image

சைட்டம் பிரச்­சி­னைக்கு  அர­சாங்கம் உட­ன­டி­யாக தீர்வு காணா­விட்டால் எதிர்­கா­லத்தில் நாட்டில் வைத்­தி­யர்­களின் பற்­றாக்­குறை ஏற்­படும்  அபாயம்  இருக்­கின்­றது என சோஷலிச மக்கள் முன்­ன­ணியின் செய­லாளர் ராஜா கொல்­லுரே தெரி­வித்தார்.

சோஷலிச  மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

மாலபே தனியார் வைத்­திய கல்­லூ­ரிக்கு எதி­ராக பல்­க­லைக்­க­ழக மாண­வர் கள் மற்றும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரி­வித்து வரு­கின்­றனர். வைத்­தி­யர்­களின் பணி பகிஷ்­க­ரிப்பு கார­ண­மாக நோயா­ளர்­களே பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

அத்­துடன் சைட்­டத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து கடந்த ஜன­வரி மாதம் முதல் பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­பீட மாண­வர்கள் வகுப்பு பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இதனால் அவர்­களின் இறு­தி­யாண்டு பரீட்­சைகள் பாதிக்­கப்­ப­டப்­போ­கின்­றன. அத்­துடன் மாண­வர்­களின் பரீட்சை பிற்­ப­டும்­போது வரு­டாந்தம் மருத்­து­வ­பீ­டத்தில் இருந்து வெளி­யாகும் வைத்­தி­யர்­களின் வீதம் குறை­வ­டையும். இதனால் எதிர்­கா­லத்தில் நாட்டில் வைத்­தி­யர்­க­ளுக்­கான பற்­றாக்­குறை ஏற்­படும்  அபாயம் ஏற்­பட்­டுள்­ளது.

 வைத்­திய கல்­லூ­ரி­களின் தரம் குறித்து தீர்­மானம் எடுக்­க­வேண்­டி­யது இலங்கை வைத்­திய சபை­யாகும். தரம் குறைந்த வைத்­திய கல்­லூ­ரி­க­ளுக்கு யாரும் அங்­கீ­காரம் வழங்­க­மாட்­டார்கள். அர­சாங்­கமும் அதனை ஏற்­கின்­றது. அத்­துடன் தனியார் வைத்­திய கல்­லூரிக்கு யாரும் எதிர்ப்பு  தெரி­விக்­க­மாட்­டார்கள். ஆனால் அந்த வைத்­திய கல்­லூ­ரி­களில் கல்வி கற்கும் மாண­வர்­க­ளுக்கு சிகிச்சை பயிற்சி அளிக்கும் பொறுப்பை அர­சாங்கம் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும்.

 வைத்­திய பீடங்­களில் இருந்து நாட்­டுக்கு வரு­டாந்தம் வெளி­யேற்­றப்­ப­ட­வேண்­டிய வைத்­தி­யர்­க­ளுக்­கான  வீதம் ஒன்று இருந்து வரு­கின்­றது. அப்­போ­துதான் ஆரோக்­கி­ய­மான வைத்­திய சேவையை மேற்­கொண்­டு­செல்லாம். அத்­துடன் நாட்டில் தனியார் வைத்­திய கல்­லூ­ரி­களை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் எமது நாட்டின் அந்­நிய செலா­வணி வெளி­நா­டு­க­ளுக்கு செல்­வதை தவிர்த்­துக்­கொள்­ளலாம். எமது நாட்டு மாண­வர்கள் வெளி­நா­டு­களில் பயில்­வதால் வரு­டாந்தம் பில்­லியன் ரூபா கணக்கில் எமது செலாவணி வெளியில் செல்கின்றது.

எனவே சைட்டம் தொடர்பாக எழுந்தி ருக்கும் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் பாரியளவில் வைத்தியர்களுக்கான பற்றாக் குறை ஏற்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02