முதலீட்டாளர்களின் வசதிக்காக நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சட்டங்கள் வகுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இலங்கையில் முதலீட்டுச் சூழலை விருத்தி செய்வதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 

70 ஆம் 80 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு பின்னாலிருந்த பல நாடுகள் இன்று அபிவிருத்தி இலக்குகளை அடைந்திக்கின்றன.

நாட்டின் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்தும் விடயத்தில் முதலீட்டாளர்களுக்கு உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  

போட்டிமிக்க ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். உற்பத்தி கைத்தொழிலுக்காக உலகின் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்த சந்தர்ப்பம் அளிப்பது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது இதன் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.