(ஆர்.யசி)

பேசிப்பேசி காலத்தை கடத்துவதை விடவும் செயற்பாட்டில் இறங்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் பலமடைந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இப்போதும் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றக்கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில்  இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும். அதேபோல் நாட்டில் நீண்டகால அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.