ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இன்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகொனற்று தாக்கியதால் குளவிகள் கலைந்து  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளன.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.