டெங்கு நோய் காரணமாக பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற இரு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

 

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

 

இதேவேளை, டெங்கு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவன், இன்று உயிரிழந்துள்ளார்.

 

தற்போது, பதுளை வைத்தியசாலையில் 61 பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.