விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு 

Published By: Priyatharshan

03 Jul, 2017 | 06:13 PM
image

கம்பர்சான்ட் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் தெற்கிலுள்ள கடற்கரையொன்றில் ஐந்து தமிழ் இளைஞர்கள் உட்பட ஏழு பேர் நீரில் மூழ்கி இறந்தமை தொடர்பான மரணவிசாரணை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்றயதினம் நிறைவுக்கு வந்துள்ளது. 

இறுதியில் மரணவிசாரணை அதிகாரி, விளையாட்டு வினையானது குறித்த ஏழு பேரின் மரணம் சம்பவித்துள்ளதாக தீர்ப்பை வழங்கினார். 

 

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி  ஐந்து தமிழர்கள் உட்பட ஏழுபேர் குறித்த கடற்கரையில் நீரில்மூழ்கி பரிதாபமாக இறந்துபோனார்கள். தென்மேற்கு லண்டனை சேர்ந்த கென் எனப்படும் கேணுகன் சத்தியானந்தன்(18), இவரது சகோதரான, கோபி எனப்படும் கோபிகாந்தன் சத்தியநாதன் (22), மற்றும் இவர்களது நண்பர்களான, நிதர்சன் ரவி (22), இந்துசன் சிறிஸ்காந்தராசா (23), குருசாந்த சிறிதவராஜா (27) ஆகிய நண்பர்களே இந்த சம்பவத்தில் இறந்து போனவர்களாவர்.

 

இம்  மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில்  இவர்கள் சார்பில், சட்டவாளர்களான, பற்றிக் றொச்சி, மாசியா வில்ஸ் ஸ்ருவேட், கிலாரி நெல்சன், ரொலு அக்பிலுசி மற்றும் கீத் குலசேகரம் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பாக கடந்த ஐந்து நாட்கள் சட்டவிசாரணையில் ஈடுபட்ட மூத்த மரணவிசாரணை அதிகாரியான அலன் கிறேஸ் தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்தார்.

”கடற்கரையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 2013 இல் றோயல் தேசிய உயிர்காப்புப் படகு நிறுவனம் வழங்கிய பரிந்துரைகளில் உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படவேண்டும் என்பதும் அடங்கியிருந்தது. ஆனால் இப்பரிந்துரை அமுல்ப்படுத்தப்படவில்லை. அவ்வாறு பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தால், இம்மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்குமா என்பது உண்மையில் தெரியாது, ஆனால் தற்போது அங்கே உயிர்காப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர் என்றார்.

இதனிடையே  கருத்து தெரிவித்த சட்டத்தரணி கீத் குலசேகரம், 

”சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இழைத்த பாரதூரமான தவறை சுட்டிக்காட்ட மறுத்தது மட்டுமல்லாமல், இறந்தவர்கள் மீதே பழியை சுமத்தும் விதத்தில் தனது தீர்ப்பை வழங்கியிருப்பது மரணவிசாரணை அதிகாரியின் மீது மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது” என்றார். அத்துடன் ”உயிர்களைக் காக்கும் கடமையில் தவறிய கவுண்சில் பணியாளர்கள் மீதும், உண்மையை மறைக்க முயன்ற மரண விசாரணை அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை தொடரும்” எனவும் தெரிவித்தார்.

இறுதியில் விளையாட்டு வினையானது என் இறுதித்தீர்பினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் மிகவும் கவலை அடைந்துள்ளதுடன் குறித்த தீர்ப்பு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10