(எம்.எப்.எம்.பஸீர்)

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ்  பொறுப்பதிகாரி, அப்போதைய நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவு விஷேட விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.

1982 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் 386 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக இந்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மோசடி தடுப்புப்பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் சானிமா விஜே பண்டாரவுக்கு அறிக்கை சமர்பித்துள்ளது.

இந் நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக  இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவினரால் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.