திரு­கோ­ண­மலை -பஞ்ச ஈஸ்­வ­ரங்­க ளில் ஒன்­றாக விளங்கும் திரு­கோ­ண­மலை கோணேஸ்­வரர் ஆலயம் இரா­வ­ணனின் கதை­யோடு தொடர்பு பட்ட ஒன்­றாகும். இலங்கை வேந் தன்  இரா­வணன் இக்­கோ­யி­லுக்கு ஒரு சோடி மான்­களை அன்­ப­ளிப்பு செய்­துள்ளான் அவ்வாறு அன்­ப­ளிப்புச் செய்­யப்­பட்ட மான்­களின் சந்­த­திகள் தான் இன்றும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

எனினும் திரு­கோ­ண­மலை கோட்­டைக்­குள்ளும்,கோணேஸ்­வரம் கோயி­லுக்கு அரு­கிலும் வாழ்ந்த மான்கள் தற்­பொ­ழுது அருகி வரு­கின்­றன. கோயில் வளாகம் மற்றும் கோட்­டை­களை விட்டு அவைகள் வெளியில் வந்து விட்­டன. 

இதனால் அன்று கிடைத் ததை போன்று உணவும், பாது­காப்­பும், இன்று கிடைப்­ப­தில்லை.அத்­துடன் மக்­களின் வரு­கையும்,அதன் இருப்பை கேள்­விக்­கு­றி­யாக்கி விட்­டது.

இதன் கார­ண­மாக இவைகள் வெளியில் நட­மா­டு­கின்­றன. உண­வுக்­காக உள்ளூர் மற்றும் வெளியூர் உல்­லாசப் பய­ணி­களால் வீசப்­ப­டு­கின்ற  எஞ்­சிய உணவுப் பதார்த்­தங்­க­ளுடன்,பொலித்தீன்கள் யோகட் கோப்­பை­களை உட்கொள்­கின்­றன.

சுமார் 500 க்கும் மேற்­பட்ட மான்கள் ஆரம்­பத்தில் காணப்­பட்ட போதிலும் தற்­பொ­ழுது 200 க்கும் குறை­வான மான்­களே காணப்­ப­டு­கின்­றன. இவைகள் பாது­காப்­பின்றி வீதி­யோ­ரங்­க­ளிலும், கடற்­க­ரை­யோ­ரங்­க­ளிலும், சில­ரு­டைய  வீடு­களின் தாழ்­வா­ரங்­க­ளிலும் வாழ்ந்து வரு­கின்­றன.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் மாத்­தி­ரமே காணப்­படும் இத்­த­கைய மான்­களை பாது காப்­பது ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் கடமையாகும். இவற்றை பாதுகாக்கும் நோக்கத்துடனே நேற்று திருகோணமலை மாவட்ட இளைஞர்களால் சிரமதானப் பணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.