இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலாஸ்டர் குக் ஊடகவியாளருடன் உரையாடலின் போது பின்னால் வந்த பந்தை பிடித்தமையினால் ஊடகவியலாளர் உயிர் பிழைத்த சம்பவம் கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது பிராந்தியங்களுக்கு இடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அதில் எசெக்ஸ் கிரிக்கெட் அணியிற்கும் மிடில்செக்ஸ் கிரிக்கெட் அணியிற்கும் இடையிலான போட்டியிற்கு முன்பதாக மைதானத்தில் பயிற்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த பயிற்சியின் போது இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் அலாஸ்டர் குக்கினை ஒரு ஊடகவியலாளர் மைதானத்தில் வைத்து நேர்காணல் செய்து கொண்டிருந்தார்.

அதன் போது அலாஸ்டர் குக்கிற்கு பின்னால் ஒரு வீரர் துடுப்பெடுத்தாட பயிற்சியில் ஈடுப்பட்டிருந்தார். தீடீரென குறித்த துடுப்பெடுத்தாடத்தில் ஈடுப்பட்டிருந்து வீரர் பந்தை எதிர்பாராத விதமாக நேர்காணல் இடம்பெற்றுக் கொண்டிருந்த திசையில் அடித்து விடுகிறார்.

இதன்போது, அலாஸ்டர் குக் தனக்கு பின்னால் வந்த பந்தை சற்றும் அவதானிக்காமல் பிடியெடுத்தமையால் ஊடகவியலாளரிற்கு ஏற்படவிருந்த மிகபெரிய ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்.