(ஆர்.யசி)

எம்மால் இடைநிறுத்தப்பட்ட உமாஓயா வேலைத்திட்டத்தை இந்த அரசாங்கம் தொடர்ந்து சரியாக முன்னெடுத்து இருந்திருந்தால் இன்று பிரச்சினைகள் எழுந்திருக்காது, இந்த திட்டத்தை கைவிடுவதை விடவும் சரியான முறையில் நிறைவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். 

ஜனாதிபதி மக்களுடன் உள்ளார் என்ற வார்த்தையை கூறுவதை விடவும் தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதே அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார். 

உமாஓயா திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முன்னாள் ஜனாதிபதியின் வேலைத்திட்டமே காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.