பெண்­களின் கர்ப்­பப்­பை­யிலும் சினைப்­பை­யிலும் கட்­டிகள் ஏற்­ப­டு­வதை அறி­வீர்கள். பெண்கள் பரு­வ­ம­டைந்த பின் மாத­வி­லக்கு முழு­மை­யாக நின்­று­போகும் மெனப்போஸ் காலம் வரை கணி­ச­மான பெண்­களில் இவ்­வா­றான கட்­டிகள் ஏற்­ப­டு­கின்­றது. கர்ப்­பப்­பையில் ஏற்­படும் கட்­டி­களை FIBROIDS பைப்­ரோயிட் கட்­டிகள் என்றும் சினைப்­பையில் ஏற்­படும் கட்­டி­களை OVABIAN TUMOURS என்றும் அழைப்பர். இவ்­வா­றான கட்­டிகள் ஏற்­ப­டாமல் தடுக்க முடி­யுமா-?

இந்த வினா­வுக்கு விடை­ய­ளிக்­கு­முன்னர் பைப்­ரோயிட் கட்­டிகள் தோன்­று­வ­தற்­கான காரணம் என்ன என்­பதைப் பற்றி பார்ப்­போ­மானால் இதற்­கான காரணம் எதையும் அறு­தி­யிட்டு கூற­மு­டி­யா­துள்­ளது. பெரும்­பாலும் குறிப்­பிட்­ட­வர்­களின் பரம்­பரை தொடர்பே கார­ண­மாக இருக்­கின்­றது. எனினும் இவற்றின் தோற்­றத்­திற்கு பால் ஓமோன்கள் எந்­த­ளவு பங்­காற்­று­கின்­றன என்­ப­தைப்­பற்றி நிறுவ முடி­ய­வில்லை. எனினும் பைப்­ரோயிட் கட்­டிகள் மணம் முடிக்க தாம­த­மா­கின்­ற­வர்­க­ளிலும் மணம் முடித்தும் குழந்தைப் பாக்­கியம் இல்­லா­த­வர்­க­ளிலும் ஏற்­ப­டு­வது அவ­தா­னிக்­கப்­ப­டு­கின்­றது. இதி­லி­ருந்து இவ்­வா­றான கட்­டிகள் தோன்­று­வ­தற்கும் ஓமோன்­களின் தூண்­டு­த­லுக்கும் தொடர்பு இருக்­கலாம் என்று தோன்­று­கின்­றது.

பெண்­களின் இன­வி­ருத்தி தொகு­தியில் பைப்­ரோயிட் கட்­டி­களோ சூல­கக்­கட்­டி­களோ தோன்­று­வதைத் தடுப்­ப­தற்கு இன்­று­வரை மருத்­துவ உலகம் எதையும் கண்­ட­றி­ய­வில்லை. இதனால் இற்­றை­வரை இக்­கட்­டிகள் தோன்­று­வதை தடுக்க முடி­ய­வில்லை. எனவே ஒழுங்­கான பரி­சோ­த­னைகள் மூலம் கட்­டிகள் தோற்றம் பெறு­வதைக் கண்­ட­றிந்து அவ­சி­ய­மெனின் உரிய சிகிச்சை பெற­வேண்டும்.

இந்த கட்­டி­களை மருந்­து­களால் குண­மாக்க முடி­யா­துள்­ளது. அவ­சியம் ஏற்­படின் சத்­திர சிகிச்சை மூலமே அகற்ற வேண்டும். கட்­டி­களை சுருங்­க­வைக்கும் மருந்­துகள் முன்னர் பாவிக்­கப்­பட்ட போதிலும் சுருங்­கிய கட்­டிகள் மீண்டும் வேக­மாக வளர்­வது தெரிய வந்­த­மையால் மருந்­து­மூ­ல­மான சிகிச்சை மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை.

சத்­திர சிகிச்­சையே தீர்வு, எனினும் அவ­ச­ரப்­பட்டு மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. பெரும்­பா­லான பைப்­ரோயிட் கட்டிகள் மெனப்போஸுடன் சுருங்கிவிடும்.மிகப்பெரிய கட்டிகளை அவசியமெனின் அகற்றலாம். சினைப்பை கட்டிகளைப் பொறுத்தவரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. மோசமாக பரவினால் கருப்பை சினைப்பையுடன் சேர்த்து அகற்றப்படுகின்றது.