எதிர்வரும் 4 ஆம்,5 ஆம்,6 ஆம் திகதிகளில் நடவடிக்கை குழு கூடவுள்ளது. இதில் சிறிலங்கா சுதந்திரகட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பு குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவரும் என நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

காலம் தாழ்த்தாமல் அரசாங்கம் இதனை வெளிக்கொணர வேண்டும் என அரசாங்கத்தை நாங்கள் கேட்டு கொள்கிறோம். இடைக்கால அறிக்கையாக இருந்தாலும்  அதில் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் இணக்கப்பாடு உண்டாயுள்ளமை வெளிவரும் அது நாடு முழுவதுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

விசேடமாக பல சந்தேகங்களுக்குள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு வெளிச்சத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.